முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமானில் நிலநடுக்கம்- 5.5 ரிக்டராக பதிவு

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

டெல்லி, ஜூலை.30 - அந்தமானில் நேற்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அந்தமானின் வடக்கு பகுதியில் நேற்று பகல் 12.37 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை மைய பொது இயக்குனர் ரதோர் தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்திய பெருங்கடல் மற்றும் அந்தமான் கடற்பரப்பு அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்