முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்ட் முன்னாள் அமைச்சரின் சொத்துகள் முடக்கம்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

ராஞ்சி, ஜூலை.30 - வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்ந்த வழக்கில் சிக்கிய ஜார்கண்ட் முன்னாள் அமைச்சர் ஒருவரின் ரூ.100 கோடி சொத்துக்களை அலாக்கப்பிரிவினர் முடக்கினர்.

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா மீது பல ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவரது சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவரது ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் ஊரக வளர்ச்சி அணைச்சராக இருந்த அநோஷ் எக்கா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.17 கோடி சொத்து சேர்த்ததாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பணபரிமாற்றங்கள் குறித்து அமலாக்கப்பிரிவினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அநோஷ் எக்காவின் சொத்துகளை அமலாக்கப்பிரிவினர் முடக்கி வைத்தனர். டெல்லியில் கவுஸ்காசா பகுதியில் உள்ள பண்ணை வீடு, குர்கானில் சுஷாந்த்களா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பஙஅகளா என பல சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்