முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜ தலைவர்கள் வீடுகளில் உளவு வேலை!

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.30 - மத்திய அமைச்சர் கட்கரி வீட்டில் ஒட்டு கேட்பு கருவி சிக்கியதாக எழுந்த சர்ச்சை அடங்கிய நிலையில், பாஜ முக்கிய தலைவர்கள் வீடுகளில் ஒட்டு கேட்பு கருவிகள் பொருத்தி அமெரிக்கா உளவு பார்ப்பதாக மீண்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பங்களாவில் வெளிநாட்டு உளவு அமைப்புகளால் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி கைப்பற்றப்பட்டதாக 2 நாள் முன்பாக பரபரப்பு தகவல்கள் வெள்யாகின. மத்திய அமைச்சரின் பங்களாக்களில் துப்புரவு பணி மேற்கொள்ளும் போது, இந் கருவி சிக்கியதாகவும், உடனடியாக அவை துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியது. என்.எஸ்.ஏ. எனப்படும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்புதான் இந்த அதிநவீன உளவு பார்க்கும் கருவிகளை பயன்படுத்துகிறது. பல்வேறு நாடுகளில் அந்த அமைப்பினர் உளவு பார்த்து சேகரித்த அதிரடி தகவல்களை சிஐஏயின் முன்னாள் ஏஜென்டு ஸ்னோடன் ஏற்கெனவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், நிதின் கட்கரி வீட்டில் ஒட்டு கேட்பு கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் எதிர்க்கட்சிகள் பெரும் புயலை கிளப்பின. இதற்கு நிதின் கட்கரி மறுப்பு தெரிவித்தார். எனது வீட்டில் ஒட்டு கேட்பு கருவி கைப்பற்றியதாக கூறப்படுவது வெறும் ஊகம். இதில் உண்மையில்லை என அவர் கூறினார். ஆனால், அவரது விளக்கத்தை ஏற்காத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகல் மத்திய அரசு இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என போர்க்கொடி உயர்த்தின. ஆனால், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், கட்கரி வீட்டில் எந்த ஒட்டு கேட்பு கருவியும் கைப்பற்றப்படவில்லை. நடக்காத ஒரு சம்பவத்துக்காக எந்த விசாரணையும் நடத்த வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் முக்கிய பாஜ தலைவர்களின் வீடுகளில் ஒட்டு கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டு, அமெரிக்கா உளவு வேலை பார்ப்பதாக மீண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி, பாஜ தலைவர் சுப்பிரமணிய சாமி கூறுகையில் பாஜ முக்கிய தலைவர்களை குறிவைத்து அமெரிக்காவின் என்எஸ்ஏ அமைப்பு உளவு பார்க்கிறது. பாஜ தலைவர்களின் வீடுகளில் ஒட்டு கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. என்எஸ்ஏ அமைப்புடன், அந்நாட்டு உளவு வேலையை பார்த்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது.

எனவே, மத்திய அரசு இது பற்றி விசாரித்து பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றார். இந்த ஒட்டு கேட்பு விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்