முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு கருணாநிதி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.30 - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்ற தமிழக வீரர் சதீஷ் குமாருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில், பளு தூக்கும் போட்டியின் 77 கிலோ பிரிவில், வேலூரைச் சேர்ந்த 22 வயதான சதீஷ் குமார் தங்கப் பதக்கம் வென்று, தமிழர்களைத் தலை நிமிர வைத்துள்ளார். சதீஷ் மொத்தம் 328 கிலோ தூக்கியிருக்கிறார். ஸ்னாட்ச் முறையில் 149 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 179 கிலோவும் தூக்கியிருக்கிறார். இதில் ‘ஸ்னாட்ச்’ முறையில் 149 கிலோ தூக்கியிருப்பது புதிய காமன்வெல்த் சாதனையாகும். ஏற்கனவே 148 கிலோ தூக்கியதே சாதனையாக இருந்தது.

தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள வேலூர் சதீஷ் குமாரை உள்ளன்போடு வாழ்த்துவதோடு, அவர் அடுத்து அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆசியப் போட்டியிலும், அடுத்த ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றிடவும் வாழ்த்துகிறேன். சதீஷ்குமாரின் பெற்றோர்களுக்கும் எனது வாழ்த்துகள். இவ்வாறு கருணாநிதி அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago