முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜான்கெர்ரி வருகை: சுஷ்மா - ஜெட்லியுடன் பிரதமர் ஆலோசனை

புதன்கிழமை, 30 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 31 - அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்தியா வரவுள்ள நிலையில் அவருடன் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா, அருண் ஜெட்லி ஆகியோருடந் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற போது அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்காவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்று கொண்ட மோடி வரும் செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான்கெர்ரி டெல்லி வரவுள்ளார். அப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவுடன் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். அப்போது மோடியின் அமெரிக்க பயணம் தொடர்பான விஷயங்கள் குறித்து அவர் விவாதிப்பார். இந்த சூழ்நிலையில் கெர்ரியுடன் பேசப்பட உள்ள விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா, அருண்ஜெட்லி ஆகியோருடன் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது இந்திய அமெரிக்க உறவுகளின் நிலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்