முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி பங்கீடு குறித்து லல்லு-நிதிஷ் பேச்சுவார்த்தை

புதன்கிழமை, 30 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை.31 - பீகாரில் எதிரகளாக இருந்த லல்லு பிரசாத்தும், நிதிஷ் குமாரும் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதிகளைக் கான இடைத்தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளனர். தொகுதி பங்கடு தொடர்பாக இரு தலைவர்களும் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம் கடந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்தது. இடையடுத்து முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார். காங்கிரசுடன் கூட்டணி அமைத்த லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் பாஜ மற்றும் லோக்ஜனசக்தி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த மாநிலத்தில் காலியாக உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் பாஜ கூட்டணியை எதிர்கொள்ள லல்லுவுடன் கைகோர்க்க நிதிஷ்குமார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இரண்டு தலைவர்களும் இதுவரை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இந்நிலையில் டெல்லி சென்ற நிதிஷ்குமார் லல்லு பிரசாத் யாதவை அவரசு வீட்டில் சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால் இருதலைவர்களும் சந்திக்க வில்லை. இருப்பினும் இரு தலைவர்களும் தொலை பேசியில் பேசி தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்தனர். லல்லுவுடன் நிதிஷ்குமார் தொலைபேசியில் பேசியபோது யாரும் உடன் இருக்கவில்லை.

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 10 தொகுதிகளில் 4 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், 4 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிடுகின்றன. 2 இடங்கள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை 3 கட்சிகளின் மாநில தலைவர்கள் கூட்டாக இன்று வெளியிடுவார்கல் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago