முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா மீது கூடுதல் தடை: ஐரோப்பிய யூனியன் முடிவு

புதன்கிழமை, 30 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

பெர்லின், ஜூலை.31 - உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு தொர்ந்து ஆதரவளிப்பதாகக் கூறி, ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும்ஒரு மனதாக தர்மானித்துள்ளனர்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தூதர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ரஷ்யா மீதான கூடுதல் பொருளாதாரத் தடை குறித்த விவரங்களை இறுதி செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. முன்னதாக, இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இத்தாலி பிரதமர் மாத்யு ரென்ஸி ஆகியோர் தொலைபேசியில் கான்பரன்சிங் முறையில் கலந்தாலோசித்ததாக ஜெர்மனி அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்தப் புதிய பொருளாதாரத் தடையின்படி, ஐரோப்பிய யூனியனின் நிதிச் சந்தைகளில் ரஷ்ய வங்கிகளின் பரிவர்த்தனைகளை குறைப்பது ராணுவத் தளவாடங்களிலும், எரிசக்தித் துறையிலும் நவீன் தொழில் நுட்பங்கள் ஏற்றுமதி மறஅறும் பொதுமக்கள் அல்லது ராணுவத் தேவைக்காக இரட்டை முறை பயன்படுத்தக் கூடிய பொருள்களைத் தடை செய்வது என திட்டமிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு எல்லையில் மலேசியாவின் பயணிகல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகும் கனரக ஆயுதங்களை கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா தொடர்ந்துவழங்கி வருவதாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்