முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலைக் கண்டித்து காஷ்மீரில் போராட்டம்

புதன்கிழமை, 30 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஜூலை.31 - காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் மாநி லத்தின் சில பகுதிகளில், இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசியதில், புகைப்பட நிருபர் காயமடைந்தார்.

இதுகுறித்து, காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில்: ஐதர்போரா, மௌலானா ஆஸாத் ரோடு ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட சில இளைஞர்கள் சிலர், பாதுகாப்புப் படையினரை நோக்கி கற்களை வீசினர். பாரமுல்லா மாவட்டத்தில் சோபார் நகரிலும், அனந்தநாக் மாவட்டத்தில் ஜங்க்லாத் மண்டி நகரிலும், ஷோபியான் நகரிலும் கலவீச்சு சம்பவங்கள் நடைபெற்றதாகத் தகவல்கிடைத்துள்ளன. போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்வதற்காக, கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. சஃபாகடல் களை வீசியதில் புகைப்பட நிருபர் ஐபீஸ் கத்ரி காயமடைந்தார். அந்தப் பகுதியில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெகுநேரம் மோதல் நீடித்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சையது அலி ஷா சிலானி, மிர்வாஸ் உமர் ஃபரூக் உள்ளிட்ட பல தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்