முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனேவில் நிலச்சரிவு: 10 பேர் பலி

புதன்கிழமை, 30 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புனே, ஜூலை.31 - புனேவில் கனமழைக் காரணமாக நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 10 பேர் மண்ணில் புதைந்து பலியாகினர். மேலும், 150-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 300 தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள ஆம்பி கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 50 குடிசை வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 150 பேர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் சென்றுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர், மருத்துவக் குழு உள்ளிட்டோர் அடங்கிய குழுவும் அங்கு விரைந்துள்ளது.

இதனிடையே, நேற்று காலை 5 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுவிட்டதாகவும், மக்கள் தூக்கத்தில் இருந்த காரணத்தால், அவர்களால் சம்பவத்தின்போது, வெளியேற கூட முடியவில்லை என்றும் உள்ளூர் போலீஸ் அதிகாரி வினோத் பவார் கூறியுள்ளார்.

மாநில முதலமைச்சர் பிருத்விராஜ் சவுகான், துணை நிலை முதலமைச்சர் அஜித் பவார் உள்ளிட்டோர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்