முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணம் தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனருக்கு ஆயுள்

புதன்கிழமை, 30 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

கும்பகோணம் ஜூலை 31 - உலகையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனையும், 8 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், பொறியாளர் ஒருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அளித்தும் மற்றும் 11 பேரை விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். பள்ளி நிறுவனருக்கு ஒரு குழந்தைக்கு 10 ஆண்டுகள் வீதம் பலியான 94 குழந்தைகளுக்கு 940 ஆண்டுகள் சிறை என்ற அளவில் தண்டனை இருக்க வேண்டும். ஆனால் இதை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி பள்ளி நிறுவனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்குவதை ஒட்டி தஞ்சை நீதிமன்றத்தின் வளாகம் முழவதும் பலத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வநதது ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி கடந்த 2004ம் ஆண்டு ஜீலை 16ந் தேதி மதிய உணவிற்காக சமையல் செய்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் பிடித்த தீ விபத்தில் பள்ளியின் மேல்மாடியில் இருந்த வகுப்பறை கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் அந்த அறையில் இருந்த 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள்.

மேலும் 18 குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் அவர்கள் குணம் அடைந்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவருடைய மனைவியும், பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சமையல்காரர் வசந்தி, அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் பி.பழனிசாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சியின் அப்போதைய ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகிய 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பள்ளி தீ விபத்து வழக்கு விசாரணை கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் முதலில் நடைபெற்றது. இந்த வழக்கில் 488 பேரை போலீசார் சாட்சிகளாக சேர்த்து இருந்தனர். மேலும் 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்பு இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு கடந்த 2006ம் ஆண்டு ஜீலை 12ந்தேதி மாற்றப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.

இதே போல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாலகிருஷ்ணன் தன்னையும இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்;. இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த தீ விபத்து நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2012 ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி இந்த வழக்கு விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கில் மொத்தம் 230 போர் சாட்சியம் அளித்தனர் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை கடந்த மார்ச் 28ந்; தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் கூறப்பட்ட சாட்சியங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. பின்னர் எதிர்தரப்பு வக்கீல்கள் அரசு தரப்பு வக்கீல் வாதம் நடைபெற்றது.

22 மாதங்களாக நடைபெற்று வந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு விசாரணை கடந்த 17ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. உலகையே உலுக்கிய இந்த தீ விபத்து வழக்கில் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் தீர்ப்பு பின்வருமாறு :

விடுதலையானவர்கள் விபரம்:

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளான பழனிச்சாமி, ராதாகிருஷ்ணன், நாராயணசுவாமி, பாலகிருஷ்ணன், மாதவன், பாலசுப்ரமணியன், பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்களான தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், விபத்து நடந்தபோது கும்பகோணத்தின் நகர ஆணையர் சத்தியமூர்த்தி, கும்பகோணம் டவுன் பிளானிங் ஆபிஸர் ஆகிய 11 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் இந்த 11 பேரையும் நீதிபதி விடுதலை செய்தார்.

குற்றவாளிகள் பட்டியல் :

கீழ்க்கண்ட பத்து பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் பெயர்கள் விபரம்:-

1. பழனிச்சாமி (பள்ளியின் நிறுவனர்)

2. சரஸ்வதி (பள்ளியின் தாளாளர்)

3. சந்தானலெட்சுமி (பள்ளியின் தலைமையாசிரியர்)

4. விஜயலெட்சுமி (சத்துணவு அமைப்பாளர்)

5. வசந்தி (சத்துணவு சமைப்பவர்)

6. ஜெயச்சந்திரன் (கட்டிட பொறியாளர்)

7. பாலாஜி

8.சிவப்பிரகாசம் (உதவியாளர் )

9.தாண்டவன்

10.துரைராஜ்

இவர்களில் பள்ளி நிறுவனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 8 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அளித்தும் மற்றும் 11 பேரை விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். பள்ளி நிறுவனருக்கு ஒரு குழந்தைக்கு 10 ஆண்டுகள் வீதம் பலியான 94 குழந்தைகளுக்கு 940 ஆண்டுகள் சிறை என்ற அளவில் தண்டனை இருக்க வேண்டும். ஆனால் இதை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி பள்ளி நிறுவனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்குவதை ஒட்டி தஞ்சை நீதிமன்றத்தின் வளாகம் முழவதும் பலத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் ரூபாய்..51 இலட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்றும் இந்தத் தொகையினை உயிர் இழந்த குழந்தைகளின் 94 குடும்பத்தினருக்கு தலா ஐம்பதாயிரம் வீதமும், படுகாயமடைந்த குழந்தைகளுக்கு தலா இருபத்தி ஐந்தாயிரம் வீதமும், லேசான காயமடைந்த குழந்தைகளுக்கு பத்தாயிரம் வீதமும் பிரித்து வழங்க உத்திரவிட்டார். தண்டனை பெற்ற பத்து பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்