Idhayam Matrimony

விரைவில் பொன்னேரி திருவுடையம்மன் கோயில் குடமுழுக்கு

புதன்கிழமை, 30 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஜூலை.31 - பொன்னேரி திருவுடையம்மன் கோயில் திருப்பணி குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும் என்று அமைச்சர் செந்தூர் பாண்டியன் கூறினார்.
நேற்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்.ராஜா பேசியதாவது:_
பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், மேலூர் அருள்மிகு திருவுடையம்மன் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த அரசு ஆவன செய்யுமா?
அமைச்சர் பூ.செந்தூர் பாண்டியன்: கடந் 3 ஆண்டுகளில் மட்டும் 5,35 திருக்கோயில்களில் திருப்பணிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றுள்ள என்பதனை இங்கே மகிழ்ச்சியுடன் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.
கேட்டுள்ள திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ள, மேலும் சட்டமன்ற உறுப்பினர் ஏற்கனவே வழங்கிய உறுதி மொழியினைத் தொடர்ந்து ராஜகோபுரம் கட்டுவதற்கு உபயதாரர்கள் கண்டறியபட்டு, அதற்கான நடவடிக்கைள் திருக்கோயில் நிருவாகத்தால் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, உறுப்பினர் கோரியுள்ள அருள்மிகு திருவுடையம்மன் திருக்கோயில் குடமுழுக்கு மிக விரைவில் நடைபெற நல்லாசியோடு அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை மிகுந்த மகிழ்சியுடன் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொன்னேரி தொகுதி, மேலூர், அருள்மிகு திருவுடையம்மன் திருக்கோயிலுக்குக் குடமுழுக்கு செய்ய முன்வந்துள்ள அவர்களுக்கும், அமைச்சர் பேவைத்தலை துணைத்தலைவர் வாயிலாக நன்றினைத் தெரித்துக்கொள்கிறேன்.
இத்திருக்கிகோயில் மிகவும் பிரசித்தப்பெற்ற நன்றியினைத் தெரிவித்துவிக்கொள்கிறேன். திருவீற்றிருக்கின்ற வடிவுடைம்மன், மேலூரிவிக்கின்ற திருவுடையம்மன் மற்றும்  திருமுல்லைலாயிலிருக்கின்ற கொடியுடையம்மான் இம்மூன்று கோயில்களிலும் ஒரே தினத்திலே வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதும் ஜதீகம். அந்த அடிப்படையிலே இந்தக் கோயிலுக்கு 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைப்புதற்கு உபதார்கள் தற்போது காலதாமதம் செய்துவருகிறார்கள்.
அமைச்சர் பூ.செந்தூர் பாண்டியன்:_ திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியம், மேலூரில் அருள்மிகு திருவுடையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் பாலிவருவாய்வூ.4,56,274/_ இத்திருக்கோயிலுக்கு புதியகொடிமரம், மடப்பள்ளி அலுவலகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. திருக்கோயிலின் சுற்றுப்புறத்தில் கருங்கல் தளம் அமைத்தல் மற்றும் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டுதல் போன்ற பணிகளுக்காக உபயதார்கள் கண்டறியப்படும் பணியினை கோயில் நிருவாகம் மேற்கொண்டு வருகிறது.
வாழும் கர்ணனாக இருக்கும் இத்திருக்கோயிலின் பிற புனரமைப்புப் பணிகளுக்காக 13_வது நிதித் குழுவிலிருந்து ரூ.30 இலட்சம் ஒதுக்கியுள்ளார்கள். தெய்வம் சக மனிதரின்மூலம்தான் நமக்கு உதவி செய்கிறது என்கிற வார்த்தைக்கு அடையாளமாகத் திகழும் முதல்வர் ஜெயலலிதா நல்லாசியோடு, மிக விரைவில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெறும் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்