முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திங்கட்கிழமை தோறும் வணிகர் குறை தீர்க்கும் நாள் கடைபிடிப்பு

புதன்கிழமை, 30 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

ன்னை.ஜூலை.31ஒவ்வொரு மாவட்டத்திலும், வருடத்திற்கு இருமுறை வணிகர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுவதன் தொடர்ச்சியாக, வணிகர்களுக்கும், வணிகவரித் துறை அலுவலர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு வணிக வரி மாவட்ட துணை ஆணையர் மற்றும் கோட்ட இணை ஆணையர் அலுவலகங்களில், முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி திங்கட்கிழமை தோறும் வணிகர் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்...

சட்டசபையில் நேற்று வ்ணிகவரி ம்ற்றும் பதிவுத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர் எம்.சி.சம்பத் தாக்கல் செய்தார்.அப்பொது அவர் அறிவித்தாவது:

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , 2013-2014-இல் சென்னை மண்டலத்தில் உள்ள நான்கு வணிகவரி கோட்டங்களின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பிற மண்டலங்களில் உள்ள வணிகவரி கோட்டங்களுக்குள்ளாகவே, வணிகவரி மாவட்டங்களுக்கு இடையேயான பணிப்பகிர்மானம் ஒரே சீராக இருக்கும் பொருட்டு, பணியாளர்கள் எண்ணிக்கை மற்றும் வேலைப்பளுவின் அடிப்படையில் மாவட்டங்கள் மற்றும் வணிகவரி சரகங்களின் எல்லை மறுசீரமைக்கப்படும்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, ரூ.250 லட்சம் செலவில், திருச்சியில் வணிகவரிப் பணியாளர் பயிற்சி நிலைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 11.6.2014 அன்று முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி நிலையத்திற்கு, கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.25.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை தலைமைப் பயிற்சி நிலையம் மற்றும் மண்டலப் பயிற்சி மையங்களில் அலுவலர்களுக்குத் துறைசார்ந்த சட்டப்பிரிவுகள் மற்றும் விதிகள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பணியாளர்களிடம் மென்பொருள் பயன்பாட்டுத்திறன் மற்றும் தலைமைப் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பயிற்சி அளிப்பது அவசியமாகும். இதற்காக, இணை ஆணையர்களுக்கு திருச்சிராப்பள்ளியிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் பிற அலுவலர்களுக்கு துறையின் பயிற்சி நிலையங்களில் பயிற்சி வழங்குவதற்காக தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் செய்து தருவதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , ரூ.154.26 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னையில் நான்கு கோட்டங்களிலும் உள்ள வரிவிதிப்பு வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டதன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட 11 புதிய வரிவிதிப்பு வட்ட அலுவலகங்களுக்கு அறைகலன்கள் கொள்முதல் செய்வதற்கு,முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , ரூ.35.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வணிகவரித் துறையின் செயல்பாடுகள் தடையில்லாமல் நடைபெறுவதற்கும் வரி வசூல் சிறப்பாக நடைபெறுவதற்கும், 18 பழைய வாகனங்களுக்குப் பதிலாக ரூ.107 இலட்சம் மதிப்பீட்டில் 18 புதிய வாகனங்களும், சென்னையில் வரிவிதிப்பு வட்டங்களை மறு சீரமைத்ததின் காரணமாக, ஏற்கனவே உள்ள இரண்டு மத்திய செயலாக்கக் குழுக்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு செயலாக்கக் குழுக்களுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , ரூ.28 இலட்சம் செலவில், 4 புதிய வாகனங்களும் வாங்கப்படும். அத்துடன் மேற்படி வாகனங்களை இயக்குவதற்கு 4 புதிய ஓட்டுனர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், வருடத்திற்கு இருமுறை வணிகர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுவதன் தொடர்ச்சியாக, வணிகர்களுக்கும், வணிகவரித் துறை அலுவலர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு வணிக வரி மாவட்ட துணை ஆணையர் மற்றும் கோட்ட இணை ஆணையர் அலுவலகங்களில், முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி திங்கட்கிழமை தோறும் வணிகர் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படும்.

வணிகவரி ஏய்ப்பை கட்டுப்படுத்தி, அரசு வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, வரி ஏய்ப்பு குறித்த தகவல் அளிப்போருக்கு, பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், முழுவதுமாக வசூலிக்கப்படும் வரித் தொகையில் 10 சதவீதம் அல்லது ரூ.25,000 என்ற உச்சவரம்பானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, ரூபாய் ஒரு இலட்சமாக உயர்த்தப்படும்.

இப்பரிசளிப்புத் திட்டத்தின் கீழ் அதிகளவிலான வரி ஏய்ப்பினை கண்டறிந்து வருவாய் ஈட்டித்தரும் துறை அலுவலர்களுக்கும் மற்றும் தனி நபர்களுக்கும் சில குறிப்பிட்ட இனங்களில் தகுந்த சன்மானம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான திருத்திய விதிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.

1. பொது அதிகார ஆவணங்கள் உரிய முத்திரைத் தீர்வையுடன் உள்ளதா என்பது குறித்து சான்றளிக்கும் அதிகாரத்தை சார்பதிவாளர்களுக்கு வழங்குதல்

ஒரு குறிப்பிட்ட ஆவணம் உரிய முத்திரைத் தீர்வை மதிப்புடன் உள்ளதா என்பதை, 1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டப் பிரிவு 31-ன்படி சான்றளிக்கும் அதிகாரம் (ஹனதரனiஉயவiடிn) தற்போது மாவட்டப் பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அயல் நாடுகளில் எழுதிக் கொடுத்து நமது மாநிலத்தில் பெறப்படும் பொது அதிகார ஆவணங்கள் போதிய முத்திரைத் தாளில் எழுதப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து, சான்று பெறுவதற்காக பொது மக்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நடைமுறையை எளிதாக்கும் வண்ணம், பொது அதிகார ஆவணங்களைப் பொறுத்தவரை, அவை உரிய முத்திரைத்தீர்வை மதிப்புடன் உள்ளதா என்பதைக் கண்டறிந்து சான்றளிக்கும் அதிகாரம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , அனைத்து சார்பதிவாளர்களுக்கும் வழங்கப்படும்.

1899 ஆம் ஆண்டு இந்திய முத்திரை சட்டப் பிரிவுகள் 52, 53 மற்றும் 54-இன் கீழ், பிழையாக பயன்படுத்தப்பட்ட, கெட்டுப்போன மற்றும் பயனுராத முத்திரைத்தாட்களுக்கான திருப்புத்தொகை வழங்கும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் அனைத்து துணைப் பதிவுத்துறைத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி துணைப் பதிவுத்துறைத் தலைவர்கள் திருப்புத்தொகை அளிக்கும் போது முத்திரைத் தாட்களின் உண்மைத்தன்மை குறித்து மாவட்டப் பதிவாளர்களிடம் அறிக்கை பெற்றே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே இத்தகைய நேர்வுகளில் விரைவு நடவடிக்கை எடுக்க ஏதுவாகவும் பொது மக்களுக்கு பயன்தரும் வகையிலும், இந்த அதிகாரம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் வழங்கப்படும்.

அடமானம் உரிமையை விடுவிக்கப்படுவதாக எழுதிக்கொடுக்கப்படும் ஆவணங்கள் இந்திய முத்திரை சட்டம் கூறு 55-ஹ கீழ் வகைப்படுத்தப்படுகிறது. இவ்வகை ஆவணங்களுக்கு சொத்தின் சந்தை மதிப்பு மீது 1ரூ முத்திரை தீர்வை, அதிகபட்சம் ரூ.25,000/- என்ற உச்சவரம்புக்குட்பட்டு வசூலிக்கப்படுகிறது. எனினும் பதிவுக் கட்டணத்திற்கு உச்சவரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் சொத்தின் சந்தை மதிப்பு மீது 1ரூ பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது. இந்நிலை முத்திரை தீர்வையை விட அதிக பதிவுக்கட்டணம் வசூலிக்கும் நிலையினை ஏற்படுத்துவதால், பதிவு செய்யவரும் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , பதிவுக் கட்டணத்திற்கு ரூ.4,000/- என உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர். பேசினார்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்