முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டகல்லூரியை தனியார் நடத்த தடை: சட்டமுன்வடிவு தாக்கல்

புதன்கிழமை, 30 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை.31 - தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை தனியார் நடத்த தடை செய்ய வகைசெய்யும் சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் ஊள்ளாட்சிதுறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்,பி,வேலுமணி தாக்கல் செய்த சட்டமுன்வடிவில் கூறப்பட்டுள்ளதாவது .

குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை வழங்க ஏதுவாக மாநிலத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையிலான அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு தனியார் பெறுப்புக்கட்டளைகள் மற்றும் சங்கங்களால் குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை அளிக்க முடியவில்லை என்பதனையும் சட்டக்கல்லூரிகளை நல்லமுறையில் திறம்பட தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியவில்லை என்பதனையும் கடந்த கால அனுபவங்கள் வெளிப்படுத்துத்துகின்றன,எனவே இச்சட்டத்தை இயற்றுவதன் மூலம் மாநிலத்தில் தனியார் நபர்கள் சட்டக்கல்லூரிகள் நிறுவுவதை தடை செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது

இவ்வாறு கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்