முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரப்பாளையம் பஸ் நிலையம் விளாங்குடிக்கு மாற்ற தீர்மானம்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக 1 - ஆரப்பாளையம் பஸ் நிலையத்தை விளாங்குடிக்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் வருமாறு:

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அருள்தாஸ்புரம் முதல் ஆரப்பாளையம் வரையும், சிம்மக்கல் முதல் செல்லூர் வரையிலும் தரைமட்ட பாலங்கள் உள்ளன. இங்கு புதிதாக உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ. 30 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாலம் கட்ட தொழில்நுட்ப அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு ஆரம்ப கட்ட பணிகளை விரைவில் தொடங்குவது, மதுரை மாநகர் தென்னிந்தியாவின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. இதனால் உள்ளூர், வெளியூர் பேருந்துகள் அதிகளவில் மதுரைக்கு வருகின்றன. ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து தேனி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு தினமும் 1300 பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால் நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் விளாங்குடியில் அரசுக்கு சொந்தமான 19.79 ஏக்கர் நிலப்பரப்பிற்கு ஆரப்பாளையம் பஸ் நிலையத்தை மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதன் மூலம் மாநகராட்சிக்கு வரிவசூல் அதிகரிக்கும் என்பதால் மேற்படி இடத்தை மாநகராட்சிக்கு வழங்க அரசின் ஆணை பெற உரிய முன்வரைவு அனுப்பி வைக்கவும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை விளாங்குடி பகுதிக்கு மாற்றியமைக்கவும் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நகர பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பேருந்து நிலையத்தை மாற்றி அமைக்கவும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்