முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. கேண்டீனில் தரமற்ற உணவு? எம்பிக்கள் புகார்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக 1 - பாராளுமன்ற கேண்டீனில் தரமற்ற உணவு சப்ளை செய்யப்படுவதால் எம்பிக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதாக மேல்சபையில் புகார் கூறப்பட்டது.

டெல்லி மேல்சபையில் எம்பிக்கள் பாராளுமன்ற கேன்டீன் சம்பந்தமான பிரச்சினையை கிளப்பினார்கள். கேள்வி நேரம் முடிந்ததும் ஐக்கிய ஜனதா தளம் எம்பி கே.சி.தியாகி எழுந்து பாராளுமன்ற கேன்டீனில் சாப்பிடும் எம்பிக்கள் பலர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் சமாஜ்வாடி கட்சி எம்பிக்கள் ஜெயாபச்சன், ராம்கோபால் யாதவ் ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். சில உறுப்பினர்கள் பேசும் போது, பாராளுமன்ற கேன்டீனுக்கு உணவு பொருட்கள் குஜராத்தில் இருந்து வருகிறது என்றார். அதற்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், சிலருக்கு எப்போதும் குஜராத்தான் கனவில் வருகிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்றார்.

இதையடுத்து பாராளுமன்ற கேன்டீன் பிரச்சினையில் கவனம் செலுத்துமாறு வெங்கையா நாயுடுவை துணை தலைவர் பி.ஜே. குரியன் கேட்டு கொண்டார். அது பற்றி கவனிப்பதாகவும் கேன்டீன் ஊழியர்களிடம் தெரிவிப்பதாகவும் வெங்கையா நாயுடு கூறினார். முன்னதாக ஜெயாபச்சன் பேசும் போது, பாராளுமன்ற கேன்டீனில் உணவு சாப்பிட்டதும் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்தான் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. கேன்டீனை பாராளுமன்ற பிரதான கட்டிடத்துக்கு மாற்றி கண்காணிக்க வேண்டும் என்று ஜெயாபச்சன் கூறினார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லாவும் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்