முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குத்துச்சண்டை: அரையிறுதிக்கு விஜேந்தர் - ஜக்ரா தகுதி

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

கிளாஸ்கோ, ஆக 1 - காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டையில் ஆண்களுக்கான மிடில் 75 கிலோ பிரிவு கால் இறுதி போட்டியில் இந்திய வீரர் விஜேந்தரும், டிரினிடாட் டொபாக்கோ வீரர் பிரின்சும் மோதினர்.

இதில் விஜேந்தர் அபாரமாக செயல்பட்டு 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதி போட்டியில் அவர் நைஜீரிய வீரர் கார்னர் கோலேயை சந்திக்கிறார். ஆண்கள் வெல்டர் 69 கிலோ பிரிவு கால் இறுதியில் இந்திய வீரர் ஜக்ரா, ஆஸ்திரேலிய வீரர் லீவிஸ் மோத இருந்தனர். இதில் ஆஸ்திரேலிய வீரர் லீவிஸ் மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் ஜக்ரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரை இறுதியில் வடக்கு அயர்லாந்து வீரர் ஸ்டீவன் டான்நெலியுடன் ஜக்ரா மோதுகிறார். ஆண்கள் லைட் 49 கிலோ பிரிவு கால் இறுதியில் தேவன் தராசிங் வெற்றி பெற்றார். அவர் ஸ்காட்லாந்து வீரர் அசில் அகமதுவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். அரை இறுதியில் அவர் வேல்ஸ் வீரர் வில்லியம்ஸ்சுடன் மோதுகிறார். ஆண்கள் ஹெவி 91 கிலோ பிரிவு கால் இறுதியில் இந்திய வீரர் அம்பரீத்சிங் தோல்வி அடைந்தார்.

பெண்கள் 51 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் பப்புவா நியூகினியா வீராங்கனை வாங்கியை தோற்கடித்தார். பெண்கள் 80 கிலோ எடை பிரிவில் கால் இறுதியில் இந்தியாவின் வைஷ்ராம் சரிதாதேவி 2-1 என்ற கணக்கில் வேல்ஸ் வீராங்கனை ஜோன்சை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். இதனால் குத்துச்சண்டை போட்டியில் 5 பதக்கம் உறுதியாகி விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்