முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு சரியான பாடம் புகட்டினோம்: விக்ரம் சிங் பேட்டி

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.1 - பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டதாக விடைபெறும் ராணுவ தளபதி விக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.

புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் சுகாக் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையொட்டி, விடைபெறுவதற்கு முன்னர் நிருபர்களுக்கு விக்ரம் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர், நிருபர்களின் பல்வேறு கேள்வி்களுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் 2013-ல் இந்திய வீரர் தலையை பாகிஸ்தான் ராணுவம் துண்டித்ததற்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டது. ராணுவம் எப்போதும் ஆயுத தாக்குதல் மட்டும் நடத்துவதில்லை. சில நேரங்களில் கொள்கை முடிவுகள், சாதுர்யமான செயல்களாலும் தாக்குதலில் ஈடுபடுகின்றன. பாகிஸ்தான் தாக்குதலுக்கு சாதுர்யமாக தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுவிட்டது. இதற்கு ராணுவ தளபதி உதவி தேவைப்படவில்லை. ஒரு கமாண்டரே இதனை செய்து முடித்துவிட்டார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியா - சீனா உறவை பொறுத்தவரை எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தால் அச்சுறுத்தல் இல்லை. ஆனால், வழக்கம் போல் பாகிஸ்தான் எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட கூடும் என்றார்.

2013-ல் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர் ஹேம்ராஜ் தலை துண்டித்து கொல்லப்பட்டார், அவருடன் கொல்லப்பட்ட மற்றொரு வீரர் சுதாகர் சிங் உடல் துண்டாடப்பட்டது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago