முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனேயில் நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கு நிதி

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புனே,ஆக.1 - மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு மத்திய அரசு உரிய உதவிகளை செய்யும் என்று உறுதியளித்தார். பலியானோர் கடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புனே மாவட்டத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலியாகினர். மேலும் 175 பேரின் நிலைமை என்னவென்று தெரியாத நிலையில், 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ராஜ்நாத் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது,சுமார் 45 வீடுகள் மற்றும் ஒரு கோயில் தரைமட்டமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னரே, தற்போது முழு அறிவிப்பு விடுவிப்பது இயலாது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்