முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா பிரதமராவதை ராகுல் தடுத்தார்: நட்வர் சிங்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.01 - கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமராக பதவி ஏற்பதை அவரது மகன் ராகுல் காந்திதான் தடுத்தார். பிரதமர் பதவியை சோனியா காந்தி தியாகம் செய்யவில்லை, என்று வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிரு்பபதாவது: கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் சோனியா பிரதமர் பதவி யேற்பதை அவரது மகன் ராகுல் காந்தி எதிர்த்தார். சோனியா பிரதமரானால், தனது தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி போன்று கொல்லப்படுவார் என்று ராகுல் காந்தி கூறினார்.

ஆகையால் மகன் என்ற முறையில், சோனியா பிரதமர் பதவியேற்பதை அனுமதிக்க முடியாது என்று ராகுல் தெரிவித்தார். தனது கருத்தில் அவர் பிடிவாதமாக இருந்தார். இதனால் தான் பிரதமர் பதவியை சோனியா காந்தி ஏற்கவில்லை. இதுதொடர்பாக கடந்த 2004-ஆம் மே மாதம் 18-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் மன்மோகன் சிங், சோனியா காந்தியின் குடும்ப நண்பர் சுமன் துபே, பிரியங்கா ஆகியோருடன் நான் கலந்து கொண்டிருந்தேன். இந்த ஆலோசனையில் சோனியா காந்தி பிரதமராவதை ராகுல் விரும்பவில்லை என்ற தகவலை பிரியங்கா தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை பிரதமராக்க சோனியா காந்தி விரும்பினார். ஆனால் உடல்நலனை காரணமாக காட்டி, பிரதமர் பதவியை ஏற்க அவர் மறுத்துவிட்டார். அதையடுத்தே மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்