முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு சக்தி ஒப்பந்தத்தால் கூடுதல் மின்உற்பத்திக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.01 - இந்சியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் மூலம் நாட்டின் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள் இறக்குமதியைப் பெற்று 1,520 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் அணு சக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்தப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: தற்போதைய வர்த்தக நடவடிக்கைகளுக்காக 4,680 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ள நிலையில், இறக்குமதி எரிபொருளை பயன்படுத்தி 1,840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இறக்குமதி எரிபொருளின் இரு்பபு நிலைக்கும், தேவைக்குமான இடைவெளி மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் 3 அணு உலைகளில் வர்த்தக நடவடிக்கைக்கான மின் உற்பத்தியை தொங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளது. இதன்படி, ராஜஸ்தான் அணு மின் உற்பத்தி மையத்தின் அலகு 5 மற்றும் 6 கர்நாடகத்தில் உள்ள கெய்கா அணு மின் உற்பத்தி மையத்தின் அலகு 4 ஆகிய 3 அணு உலைகளில் கூடுதல் அணு மின் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்பட்சத்தில் கூடுதல் மின் உற்பத்தியானது 1520 மெகாவாட் அளவை எட்டும். இந்திய அணு சக்தித் துறை அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, மங்கோலியா, நமீபியா, அர்ஜென்டினா, பிரிட்டன், கனடா, தென் கொரியா, கஸ்கஸ்தான், செக் குடியரக ஆகிய நாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா, ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்