முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவுக்கு சிறப்பு அந்தஸ்து: மத்திய அரசு நிராகரிப்பு

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பனாஜி, ஆக.01 - கோவா மாநிலத்துக்கு சிற்பபு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இந்தியாவில் மிசோரம், இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு இந்திய அறசியல் அமைப்பு சட்டம் பிரிவு 371ன் கீழ் சிற்பபு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் படி அந்த மாநிலங்களில் வேறு மாநிலத்தவர் நிலங்கள் வாங்க முடியாது. இதே போன்று சிறப்பு சலுகை ஜம்மு காஷ்மீர் அரசுக்கும் உள்ளது. இத்தகைய சிறப்பு அந்தஸ்து கோவா மாநிலத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என மனோகர் பரிக்கர் தலைமையிலான பாஜ அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கோவா மாநிலத்தின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டாமல் இருந்தது. இந்நிலையில் மத்திய ஆட்சி மற்றும் ஏற்பட்டு மோடி தலைமையிலான பாஜ கூட்டணி அரசு அமைந்தது. இதனால் கோவா மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பாஜ உறுப்பினர் சாந்தாராம் நாயக் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சக் கிரண் ரிஜ்ஜு எழுத்து மூலமாக அளித்த பதில்: கோவா மாநிலத்துக்கு சிற்பபு அந்தஸ்து வழங்க முடியாது. இLு தொடர்பாக மாநில அரசு முன்வைத்தo வாதங்கள் ஏற்கும் படியாக இல்லை.

இநஅத குடிமகன்கள் இந்தியாவின் எந்த பகுதியிலும் குடியேற இந்திய அறசியல் சட்டம் அனுமதி அளிக்கிறது. நில உரிமையை அடுத்தவருக்கும் விற்பனை செய்தல், எழுதிகொடுத்தல் விவகாரத்தில் ஓரளவு கட்டுபாடுகள் விதிக்க மாநில அறசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி உரிய சட்டங்கள் இயற்றிக் கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்