முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான தொடரை 1-1 சமன் செய்தது இங்கி.,

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

செளதாம்ப்டன், ஆக.01 - இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் 266 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரை 1--1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் டிராவிலும், 2வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றியும் பெற்றது. இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி செளதாம்ப்டனில் நடந்து வந்தது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளைப் போல இல்லாமல், இப்போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக ஆடியது. குறிப்பாக அதன் பேட்டிங் மேம்பட்டிருந்தது. போட்டியின் ஆரம்பத்திலிருந்தே இங்கிலாந்தின் கை ஓங்கியே இருந்தது. இதனால் எழுந்திருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது இந்தியா.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 569 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 330 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களைச் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் இந்தியா 445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குக்குத் தள்ளப்பட்டது. இன்று ஆட்டத்தின் கடைசி நாள். இன்று இந்தியா தனது விக்கெட்களை வேகமாக பறி கொடுத்தது. இங்கிலாந்துப் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் வீழ்ந்தனர். நேற்று முக்கியமான விக்கெட்டான டோணியை 6 ரன்களுக்கு இழந்தது இந்தியா. அபாரமாக பந்து வீசிய மொயீன் அலி 6 விக்கெட்களைச் சாய்த்து அசத்தி விட்டார். அதேபோல ஆண்டர்சன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

மொயீன் அலியின் சுழலைச் சந்திக்க முடியாமல் சுருண்ட இந்தியா, 178 ரன்களில் ஆட்டமிழந்தது. இன்றைய ஆட்டத்தின் ஒரே ஆறுதல் அஜிங்கியா ரஹானே போட்ட அரை சதம்தான். அவர் 52 ரன்களை எடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago