முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய தடுப்பணைகள்: அமைச்சர்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.1 - : தமிழ்நாட்டில் நிலத்தடி நீரை செறிவுட்ட தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்..

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மேலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆர்.சாமி கேட்ட கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது: மேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 18 கண்மாய்கள் உள்ளன. இதில் 3 கண்மாய்களும் அதற்குரிய வரத்துக்கால்வாய்களும் தூர்வாரப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டில் மருதங்குடி கண்மாய் ஆழப்படுததி தூர்வாரப்படும்.

மேலும் உள்ள கண்மாய்களும் படிப்படியாக தூர்வாரப்படும். பெரியாறு பிரதான வாய்க்காலின் கிளை வாய்கால்கள் 10-ல் 7 நல்ல நிலையில் உள்ளது. மீதம் உள்ள கிளை வாய்க்கால்களை சீரமைப்பது குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில் உகுநத இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் பல தடுப்பணைகள் கட்டுவதற்கு உரிய ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்