முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சே பொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக 2 - இலங்கை அரசு இணையதளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் வெளியான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஒரு பதிவு வெளியாகியிருந்து. அதில் தமிழக மீனவர்கள் பிரச்சினைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவதை தரக்குறைவாக விமர்சித்து கட்டுரை ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் வெகுண்டு எழுந்து தமிழக முதல்வரை தரக்குறைவாக விமர்சித்து கட்டுரை வெளியிட்ட இலங்கை ராணுவத்தையும், இலங்கை அதிபரையும் கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ராஜபக்சேவின் கொடும்பாவியை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் எரித்தனர்.

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே கட்டபொம்மன் சிலை அருகே மதுரை மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நேற்று மாலை திரண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், விவசாய பிரிவு மாநில இணை செயலாளர் சீத்தாராமன், மாவட்ட அவை தலைவர் புதூர் கே. துரைபாண்டியன், துணை செயலாளர் சி. தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ஜெ. ராஜா, பகுதி கழக செயலாளர்கள் பெ. சாலைமுத்து, தளபதி ஆர். மாரியப்பன், வி.கே.எஸ். மாரிச்சாமி, ஏ.கே. முத்து இருளாண்டி, பேராசிரியர் ஜெயபால், மத்திய தொகுதி கழக செயலாளர் கிரம்மர் சுரேஷ், அன்பு செழியன், கவுன்சிலர்கள் முருகேசன், குமுதா மற்றும் கோட்ஸ் பன்னீர் செல்வம், 12வது வட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், பஜார் துரைபாண்டி, மதுரை வீரன், எல்லீஸ் ஜெயராஜ், என். பாசுபாய் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். மதுரை புதூர் பஸ் நிலையம் பகுதியில் வடக்கு 1ம் பகுதி செயலாளர் அண்ணாநகர் எம்.என். முருகன் தலைமையில் அதிமுகவினர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். இதில் கவுன்சிலர் அபுதாஹீர், வட்ட செயலாளர்கள் கே.எம். கண்ணன், கார்த்திக் முனியசாமி, பீபிகுளம் ராமசந்திரன், புதூர் இளங்கோ, வக்கீல் சுந்தரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒத்தக்கடையில் ஒன்றிய கழக செயலாளர்கள் தக்கார் பாண்டி, கே. முருகேசன், கிழக்கு தொகுதி கழக செயலாளர் மா. இளங்கோவன், மாவட்ட மாணவரணி செயலாளர் கே. மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் கள்ளந்திரி சேகர், ஒன்றிய துணை சேர்மன் கார்த்திகேயன், உத்தங்குடி மகேஷ், வழக்கறிஞர் ஒத்தக்கடை சேகர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் திரண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் ராஜபக்சேவின் உருவ பொம்மையை ​எரித்து அக்கட்சித் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதே போல் தமிழகம் முழுவதும் அதிமுகவினரும், பிற அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இலங்கை அரசு குறிப்பிட்ட அந்த பதிவை இணையத்தில் இருந்து நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்