முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவானில் கியாஸ் குழாய் வெடித்ததில் 24 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

தைபே, ஆக.02 - தைவான் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரம் கயோக்சியங். இங்கு 28 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் சப்ளை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அஙஅகு கியாஸ் குழாய்களில் திடீரென தீப்பிடித்தன. இதனால் பூமியில் புதைக்கப்பட்டிருந்த குழாய்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் ரோடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. மேலும் குழாய்களில் இருந்து கசிந்த கியாஸ் கரும் புகையுடன் கொளுந்து விட்டு எரிந்தது. ரோடுகளில் மிகப்பெரிய குகைகள் போன்று பள்ளங்கள் உருவாகின. போட்டில் சென்ற கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கல் தீப்பிடித்து எரிந்து வெடித்தன. இதனால் ரோடுகளில் ஆங்காங்கே அவை சிதறிக் கிடந்தனர்.

இந்த விபத்தில் ஏராளமானவர்களுக்கு உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. தகவலறிந்ததும் தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்தும் 24 பேர் பலியாகினர். 270 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கியாஸ் குழாய் வெடித்த பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இது தைவானில் ஒருவாரத்தில் நடந்த 2-வது மிகப்பெரிய விபத்தாகும். கடந்த 23-ஆம் தேதி பெங்கு தீயில் தைவான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 48 பேர் பலியாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago