முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

653 அம்மா உணவகங்கள் செயல்படும்: அமைச்சர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 2 - தமிழகம் முழுவதும், 653 அம்மா உணவகங்கள், செயல்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அப்போது அவர் அறிவித்ததாவது:-

2011 ஆம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை, 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதில் 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 440 பேர் நகர்ப்புரங்களில் வாழ்கின்றனர். இது, மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 48.50 சதவீதமாகும்.

12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள், ஆக மொத்தம், 664 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டு, இந்தியாவிலேயே, நகர்மயமாதலில், முதன்மை மாநிலமாக, தமிழ்நாடு விளங்குகிறது.

நகர்மயமாதலில் மட்டுமல்லாது, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு உள்ளிட்ட, அனைத்துத் துறைகளிலும், நாட்டின் முதன்மை மாநிலமாக, தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்தோடு, அதற்காக, 24 மணி நேரமும், ஓய்வின்றி உழைக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சராக, 3 ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை,

உடனடியாகக் சீரமைத்து, சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், போதுமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தவும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும், தெருவிளக்குகள் போன்ற, அடிப்படை வசதிகளை செம்மைப்படுத்தவும், ஆணையிட்டார்கள்.

மேலும், முந்தைய மைனாரிட்டி திமுக அரசின், திறனற்ற நிர்வாகத்தால், பெருமளவில் சீர்கெட்டுக் கிடந்த, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளையும், சேவைகளையும், மேம்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு மேற்கொண்ட, மாண்புமிகு அம்மா அவர்கள், நகர்ப்புர உள்ளாட்சிக் கட்டமைப்புகளை மேம்படுத்த, ஆகிய இரு முன்னோடித் திட்டங்களை, செயல்படுத்த ஆணையிட்டார்கள். இத்திட்டங்களுக்கான, முழு நிதி உதவியையும், மாண்புமிகு அம்மா அவர்களின் அரசே மானியமாக வழங்குகிறது.

இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்திற்கு, 750 கோடி ரூபாயும், சென்னை பெருநகர் வளர்ச்சித் திட்டத்திற்கு, 500 கோடி ரூபாயும், ஒதுக்கீடு செய்து, மாண்புமிகு அம்மா அவர்கள், ஆணையிட்டுள்ளார்கள்.

அத்துடன், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்காக, 1,161 கோடி ரூபாயும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்காக, 2,450 கோடி ரூபாயும், ஒதுக்கீடு செய்து, சாலைகள், தெருவிளக்குகள், பாதாளச் சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை, பேருந்து நிலையங்களின் மேம்பாடு, வாகனங்கள் நிறுத்துமிடங்கள் முதலான வசதிகளுக்காக,

16,110 எண்ணிக்கையிலான பணிகளை, செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ள, மாண்புமிகு அம்மா அவர்கள், ஆணையிட்டார்கள். அவற்றில், பெரும்பாலான பணிகள், முடிக்கப்பட்டுள்ளன, என்பதை இந்த அவையில், மகிழ்ச்சியோடு, தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா உணவகம் திட்டத்தின் கீழ், தற்போது, சென்னை மாநகராட்சியில், 200 கோட்டங்களிலும், மற்றும் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட 3 மருத்துவமனைகளிலும், இதர 9 மாநகராட்சிகளில் 91 இடங்களிலும், அம்மா உணவகங்கள், சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன.

மேலும், சென்னையில் கூடுதலாக 200 இடங்களிலும், மாவட்டத் தலைநகரங்களில் உள்ள, 27 அரசு மருத்துவமனைகளிலும், திண்டுக்கல், தஞ்சாவூர், கோயமுத்தூர் ஆகிய மாநகராட்சிகளில், தலா ஒன்று வீதம் 3 இடங்களிலும், பிற நகராட்சிகளில், 129 இடங்களிலும், அம்மா உணவகங்கள் அமைக்க மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டு, அதற்கான பணிகள், விரைந்து நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் முடிவடைந்தவுடன், தமிழகம் முழுவதும், 653 அம்மா உணவகங்கள், செயல்படும் என்பதை, மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா உணவகம் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் இன்றைய தேதி வரை, 17 கோடியே 61 லட்சத்து 51 ஆயிரத்து 674 இட்லிகளும், 74 லட்சத்து 86 ஆயிரத்து 295 பலவகை சாதங்களும், விற்பனை செய்யப்பட்டு, ஏழை நடுத்தர மக்களின் பசி ஆற்றப்பட்டுள்ளது என்பதை, இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும், பலவகை சாதங்கள் ஐந்து ரூபாய்க்கும் வாங்கி, ஏழை நடுத்தர மக்கள், வயிராற உண்டு மனதார வாழ்த்திக் கொண்டு உள்ளார்கள். சென்னையில் மட்டும், மாலை வேளைகளில், இரண்டு சப்பாத்தியுடன் பருப்பு கடைசல், மூன்று ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது.

குஜராத், ராஜஸ்தான், போன்ற பிற மாநிலங்களிலிருந்து

அதிகாரிகள் குழு மட்டுமல்ல,

எகிப்து போன்ற, பிற நாடுகளிலிருந்து அமைச்சர்கள் குழுவும்,

தமிழ்நாட்டிற்கு வருகை தந்து,

அம்மா உணவகங்களை நேரில் பார்வையிட்டு,

அம்மா உணவகம் திட்டத்தை செயல்படுத்திட,

ஆய்வு செய்து சென்றுள்ளார்கள் என்னும் போதே,

மாண்புமிகு அம்மா அவர்கள், எந்த அளவு,

மக்கள் கண்ணோட்டத்துடனும், தீர்க்க நோக்கோடும்,

திட்டங்களை சிறப்பாக வகுத்து செயல்படுத்துகிறார்கள்

என்பதைப், புரிந்து கொள்ள முடியும் என,

இந்த அவையில் மிக்க பெருமையோடு,

தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று முன்தினம் கூட, ஆந்திர மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர் அவர்கள், சென்னையிலுள்ள, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இயங்கும், அம்மா உணவகத்திற்கு வருகை தந்து, சாம்பார் சாதம் மற்றும் தயிர்சாதம் சாப்பிட்டுவிட்டு, பாராட்டிப் பேசி, ஆந்திர மாநிலத்திலும் அம்மா உணவகம் போலவே, உணவகம் தொடங்கப்படும் என்று, செய்தியாளர்களிடம் கூறிச் சென்றுள்ளார், என்பதை இப்பேரவைக்கு, பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரியிலும், முல்லைப் பெரியாரிலும், இடைவிடாத சட்டப் போராட்டம் நடத்தி, தமிழகத்தின் உரிமைகளை மீட்டு, அந்த நதிகளின் நீரில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டிய, மாண்புமிகு அம்மா அவர்களைப் பார்த்து, """"கண்ணீர் துடைத்த தண்ணீர்த் தாயே"" என்று மக்கள் பாராட்டுகின்றார்கள்.

தமிழக மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணியை, முக்கியப் பணியாக, முன்னுரிமைப் பணியாக, எடுத்துச் செயல்பட வேண்டுமென, மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதன்படி, ஊரகப் பகுதிகளில், போதியளவு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்குடன், தனி மின்விசைத் திட்டங்கள், மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், செயல்படுத்தப்படுகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில், மொத்தம் 18,705 ஊரகக் குடியிருப்புகளுக்கு, 79.46 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 3,933 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணையின்படி, இந்த ஆண்டில், மேலும் 4,805 ஊரகக் குடியிருப்புகள், 578 அங்கன்வாடி மையங்கள், 272 அரசுப் பள்ளிகள், மற்றும் 13 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆகியவற்றிற்கு, குடிநீர் வசதி செய்து தரப்பட உள்ளன என்பதை, இப்பேரவைக்கு, தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மாண்புமிகு அம்மா அவர்கள், மூன்றாம் முறையாகப் பதவியேற்று, கடந்த 3 ஆண்டுகளில், 35 நகர்ப்புர குடிநீர் மேம்பாட்டு திட்டங்களை, 40.14 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 557.54 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை, இந்த அவையில், பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நடப்பு நிதியாண்டில், 1421.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,

54 நகர்ப்புர குடிநீர் திட்டப் பணிகள், 34.24 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், நடைபெற்று வருகின்றன. அனைத்துத் திட்டங்களையும், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று, மாண்புமிகு அம்மா அவர்கள், ஆணையிட்டுள்ளார்கள் என்பதையும், தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னதானத்திற்கு இணையாக, துணையாக, ஒரு தானத்தை சொல்லவேண்டும் என்றால், அது தண்ணீர் தானம்தான்! சாப்பிடும்போது தொண்டையில் உணவு சிக்கினால், விக்கலால் ஒரு சிக்கல் ஏற்பட்டால், அப்போது தண்ணீர் தரவேண்டியதின் தேவை நமக்கு சட்டெனப் புலனாகும்.

தண்ணீர் தானத்தால், மன நிம்மதி ஏற்படும் என்று, பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். தருபவருக்கு மட்டுமல்ல, பெறுபவருக்கும் தாகம் தீர்த்து, நிம்மதியைத் தரும் குடிநீரை, தடையில்லாது தமிழக மக்கள் அனைவருக்கும், தந்திட வேண்டுமென்பதே, மாண்புமிகு அம்மா அவர்களின் நோக்கம்.

இந்நோக்கத்தினை நிறைவேற்றிட, மாண்புமிகு அம்மா அவர்கள், சிறிய மற்றும் பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை, மிகுந்த முனைப்புடன் நிறைவேற்றி வருகிறார்கள்.

கடந்த 3 ஆண்டு கால பொற்கால ஆட்சியில், 8.4 இலட்சம் மக்கள், பயன்பெறும் வகையில், 148.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,

25 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது, 34 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், மொத்தம் 31.26 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 879.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செயலாக்கப்பட்டு வருகின்றன என்பதை, இந்த அவையில் தெரிவிப்பதில், மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2011-12 ஆம் ஆண்டில் 3 பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான ஆய்வு, மேற்கொள்ளப்படும் என்றும்,

2012-13 ஆம் ஆண்டில், அவை செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், ஆணையிட்டிருந்தார்கள்.

இத்திட்டங்களுக்கான ஆய்வுப் பணிகள் அனைத்தும்,

2011-12 ஆம் நிதியாண்டிற்குள்ளாகவே முடிக்கப்பட்டு,

முதல் பணியாக, 260.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7.75 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், கடலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள், நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் பணியாக, 315.7 கோடி ரூபாய் மதிப்பில்,

7.63 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, 1751 ஊரகக் குடியிருப்புகள், மற்றும் வல்லம் பேரூராட்சி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள், நடைபெற்று வருகின்றன.

மூன்றாவது பணியாக, 301.5 கோடி ரூபாய் மதிப்பில், 6.65 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த, 1891 ஊரகக் குடியிருப்புகளுக்கான, கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளும், நடைபெற்று வருகின்றன. இந்த 3 திட்டங்களும் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும் 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7.22 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கான, இரண்டாம் கட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணி, மாண்புமிகு அம்மா அவர்களின் ஒப்புதல் பெற்று, செயலாக்கத்திற்கு விரைவில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதைத், தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல, கடந்த ஆண்டில், மாண்புமிகு அம்மா அவர்கள், இப்பேரவையில், விதி 110-ன் கீழ் அறிவித்த, 3 பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களில், முதல் திட்டமான, தஞ்சாவூர் மாவட்டத்தில், 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 495.7 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், துவங்கப்பட்டுள்ளன என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது திட்டமான, கோயம்புத்தூர் மாவட்டத்தில், 1.83 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 130.46 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டமும், மற்றும்

3 வது திட்டமான, திண்டுக்கல் மாவட்டத்தில், 8.26 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 636 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டமும், விரைவில் துவங்கப்பட உள்ளன என்பதையும், இப்பேரவையின் மூலம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட, 8 லட்சம் மக்கள் பயன்பெறும், 1,110 கோடி ரூபாய் மதிப்பிலான, சிவகங்கை மாவட்டத்திற்கான, கூட்டுக் குடிநீர் திட்டம், மற்றும் 2.8 லட்சம் மக்கள் பயன்பெறும் 169 கோடி ரூபாய் மதிப்பிலான, கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் கூட்டுக் குடிநீர் திட்டம், ஆகிய திட்டங்களுக்கான, ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், அழகிய பாண்டிபுரம் மற்றும் 8 பேரூராட்சிகள், 246 ஊரக குடியிருப்புகளில்,

2.96 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 109.8 கோடி ரூபாய் மதிப்பிலான, கூட்டுக் குடிநீர் திட்டம், நிறைவேற்றிட, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி, சேலம் மாவட்டம் மேச்சேரி, நங்கவள்ளி ஒன்றியங்களைச் சேர்ந்த, 2.99 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 158.64 கோடி ரூபாய் மதிப்பிலான, கூட்டுக் குடிநீர்த் திட்டம், மற்றும் திருச்சி மாவட்டம், துறையூர், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியாபுரம், முசிறி ஒன்றியங்களைச் சேர்ந்த, 1.49 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 126.95 கோடி ரூபாய் மதிப்பிலான, கூட்டுக் குடிநீர் திட்டங்கள், விரைவில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, துரிதமாக முடித்திட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டு காலத்தில், மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி, மொத்தம் 12 பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள், தமிழகம் முழுவதும், 64.63 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 4435.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செயலாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக, நிறைவேற்றிட வேண்டுமென, மாண்புமிகு அம்மா அவர்கள், ஆணையிட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சிக் காலத்தில், 8 பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், செயல்படுத்துவதாக அறிவித்தார்கள். அதற்கான தொடர் நடவடிக்கைகள், சரிவர எடுக்கப்படாமல் இருந்த நிலையில், தேர்தல் வந்தவுடன், அவசர அவசரமாக, அடிக்கல் நாட்டு விழா என்ற பெயரில், மக்கள் பணத்தை விரயமாக்கி, நாசமாக்கி விட்டுச் சென்றார்கள். ஆனால், மாண்புமிகு அம்மா அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், கடந்த மைனாரிட்டி திமுக அரசால், விட்டுச் செல்லப்பட்ட பணிகளையும், மக்கள் நலனுக்காக விரைவுபடுத்தி, அவற்றுள் 6 பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள், நடப்பு நிதியாண்டிலேயே நிறைவேற்றிடும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 2 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் 2015-16 ஆம் ஆண்டில் நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு, குடிநீர் வசதி வழங்குவதுடன், அப்பகுதியில் நிலவும், புளோரைடு பாதிப்பை குறைத்திடவும், மாண்புமிகு அம்மா அவர்கள், ஓகேனக்கல் குடிநீர் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தை, சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள்.

இத்திட்டத்தை செயல்படுத்த, முதன் முதலாக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால், 1986 ஆம் ஆண்டு, 120 கோடி ரூபாய் மதிப்பில், ஓகேனக்கல் குடிநீர்த் திட்டத்திற்கான முன்வடிவு, தயாரிக்கப்பட்டது என்பதை, இப்பேரவையில் எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ளேன்.

1991-ஆம் ஆண்டு, மாண்புமிகு அம்மா அவர்கள், முதன் முறையாக, ஆட்சிப் பொறுப்பேற்றதும், இதனை ஆய்வு செய்து, இத்திட்டத்தை செயல்படுத்திட, 1994 ஆம் ஆண்டில், 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இதனை திருத்தி, நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு அம்மா அவர்கள், இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, டிசம்பர் 2001ல், இத்திட்டத்திற்கு, பன்னாட்டு நிதி ஆதாரம் பெறுவதற்கான, ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாண்புமிகு அம்மா அவர்கள், மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முந்தைய மைனாரிட்டி திமுக அரசால், 18 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிக்கப்பட்ட நிலையில், ஓகேனக்கல் குடிநீர் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தை, விரைந்து செயல்படுத்தி, வெற்றிகரமாக நிறைவேற்றி, 29.5.2013 அன்று, மாண்புமிகு அம்மா அவர்கள், தமது பொற்கரங்களால், இந்தத் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

1,928.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த, 7,716 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள, 33.87 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

இதில், தற்போது, 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 6167 ஊரகக் குடியிருப்புகளைச் சார்ந்த, 29.5 லட்சம் மக்களுக்கு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள குடியிருப்புகளுக்கு, செப்டம்பர் 2014 க்குள், குடிநீர் வழங்கப்படும் என்பதை, இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!

மாண்புமிகு அம்மா அவர்களின், தொலைநோக்குப் பார்வை, மற்றும் புதிய சிந்தனையுடன், நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும், புதிய வீராணம் திட்டத்தினை, 2004 ஆம் ஆண்டு, போர்க்கால அடிப்படையில், மிகக்குறுகிய காலத்தில், விரைவாக செயல்படுத்தி, சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைக்கு, நிரந்தர தீர்வைக் கண்டார்கள்.

சென்னைக்கு அருகிலுள்ள, மீஞ்சூரில், 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட, கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை தந்தவர், மாண்புமிகு அம்மா அவர்கள் தான். தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில், 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட, கடல் நீரை குடிநீராக்கும், மாபெரும் திட்டத்தை, 22.2.2013 அன்று மாண்புமிகு அம்மா அவர்கள், தமது பொற்கரங்களால், துவக்கி வைத்தார்கள் என்பதை இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை நகர மக்களின், குடிநீர்த் தேவை, 2017 ஆம் ஆண்டு, நாளொன்றுக்கு, 1584 மில்லியன் லிட்டராக இருக்கும் என்பதை, கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தொலை நோக்குச் சிந்தனையுடன், இப்பேரவையில், விதி 110ன் கீழ், சென்னைக்கு அருகே, பேரூரில் 4,070.67 கோடி ரூபாய் செலவில், நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறனுள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைத்தல், மற்றும் நெம்மேலியில் 1371.86 கோடி ரூபாய் செலவில், நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர், கடல் நீரை குடிநீராக்கும், திட்டத்தினையும் செயல்படுத்திட ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், இராமநாதபுரத்தில், 1500 கோடி ரூபாய் மதிப்பிலும், தூத்துக்குடியில், 1500 கோடி ரூபாய் மதிப்பிலும், நாளொன்றுக்கு, தலா 100 மில்லியன் லிட்டர் திறனுள்ள, 2 கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை அமைத்திட, மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் என்பதை, இப்பேரவைக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் மட்டுமே, தற்போது பாதாளச் சாக்கடை அமைப்புகள் உள்ளன. இந்நிலையை மாற்றி, மாநிலத்தின் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும், பாதாளச் சாக்கடை திட்டத்தை, படிப்படியாக ஏற்படுத்த வேண்டுமென்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ஆணையிட்டுள்ளார்கள்.

சென்னை நகரில், 5 கழிவுநீர் மண்டலங்களில், நாள் ஒன்றுக்கு 649 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட, கழிவு நீர்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக, நாள் ஒன்றுக்கு 480 மில்லியன் லிட்டர், கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, 30 மில்லியன் லிட்டர் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக, தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

பெருங்குடி, நெசப்பாக்கம், கொடுங்கையூர் மற்றும் கோயம்பேடு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்திகரிப்பு செய்வதுடன், கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையத்தினை இயக்குவதற்குத் தேவையான, மின்சாரத்தில், 77 சதவிகிதம் ஈடுசெய்யப்படுகிறது.

சென்னை மாநகரத்துடன் இணைக்கப்பட்ட, 42 உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, பாதாளச்சாக்கடைத் திட்டத்தினை விரிவு படுத்தும் நோக்கில், பல்வேறு கட்டங்களில், செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளைப் பொறுத்தவரையில், கடந்த மைனாரிட்டி தி.மு.க அரசால், 55 பாதாளச் சாக்கடைத் திட்டங்கள், அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதில், செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவை, 20 திட்டங்கள் மட்டுமே. மீதமுள்ள, 35 திட்டங்களில், 18 திட்டங்கள், நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும், 17 திட்டங்கள், அறிவிக்கப்பட்ட நிலையிலும், கடந்த மைனாரிட்டி திமுக அரசால், கைவிடப்பட்டது. அதாவது, பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் மைனாரிட்டி திமுக ஆட்சியில் பாதாளத்திலேயே கிடந்தன.

கடந்த மைனாரிட்டி திமுக அரசால் எடுத்துக் கொள்ளப்பட்ட, 20 திட்டங்களில், 1 திட்டம் மட்டுமே, பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், மூன்றாம் முறையாக, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இதன் மீது ஆய்வு நடத்தி, மீதமுள்ள 19 திட்டப் பணிகளை, விரைந்து செயலாக்கிட ஆணையிட்டு, 11 திட்டங்கள் முடிக்கப்பட்டு. மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மார்ச் 2016-க்குள்ளாக, மீதமுள்ள பணிகளையும் முடித்திட, மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

இத்துடன், மேலும் கூடுதலாக, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் 21 நகராட்சிகளில், பாதாளச் சாக்கடைத் திட்டத்தினை செயல்படுத்திடவும், 2012-13 ஆம் ஆண்டில், மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மாமல்லபுரம், திருச்செந்தூர், திருமழிசை, ஒரத்தநாடு மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய பேரூராட்சிகளில், 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போது பாதாளச் சாக்கடைப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில், நாள்தோறும், சுமார் 14086 மெட்ரிக் டன் திடக்கழிவு, உற்பத்தியாகின்றது.

மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையிலான அரசு, திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு, அதிகபட்ச முன்னுரிமை வழங்கி வருகிறது. முதற்கட்ட குப்பைச் சேகரிப்பு, மற்றும் குப்பைகளை எடுத்துச் செல்லும் பணிகளுக்கு, ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு வகையான வாகனங்கள், மற்றும் கொள்கலன்கள், 187.18 கோடி ரூபாயில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், கொள்முதல் செய்யப்பட்டு, குப்பை சேகரிக்கும் பணி, அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும், சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளைச் செயல்படுத்திட, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் வேலூர் மாநகராட்சிகளிலும், நாகர்கோவில் நகராட்சியிலும், செயலாக்க ஆலோசகர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, நிதி நிலைமை, நலிவுற்றுள்ள, உள்ளாட்சி அமைப்புகளில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளைச் செயல்படுத்த, கடந்த, நிதியாண்டில், 100 கோடி ரூபாய் மதிப்பில், திடக்கழிவு மேலாண்மை சிறப்பு நிதி, ஏற்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், திருநெல்வேலி மாநகராட்சியில், கழிவிலிருந்து, 26 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், மற்றும் ராமையன்பட்டியில், கொட்டப்பட்டுள்ள குப்பைகளை, அறிவியல் சார் முறையில் மூடும் பணி, மற்றும் தாம்பரம் நகராட்சியில், உயிரி எரிவாயு கூடம் அமைக்கும் பணி, ஆகியன விரைவில், துவங்கப்படவுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு, திடக்கழிவு மேலாண்மை நிதி, 100 கோடி ரூபாயிலிருந்து 133 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும், தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சென்னையைப் பொறுத்த வரையில், நாள்தோறும் உருவாகும், குப்பையை அகற்றும் பணியை, 17,000 துப்புரவு பணியாளர்கள் மூலம், சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இத்திடக் கழிவுகளை, 322 நவீன குப்பை நெருக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்கள், 177 டிப்பர் வாகனங்கள் மற்றும் 12 இயந்திர பெருக்கிகள், 57 சக்கரத்தடை வாகனங்கள் மற்றும் 25 பளு துhக்கிகள் ஆகியவற்றைக் கொண்டு அகற்றி வருகிறது.

1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவினத்தில், 45 எண்ணிக்கையிலான, பிளாஸ்டிக் துகள்களாக்கும் இயந்திரங்கள், கொள்முதல் செய்யப்பட்டு, குப்பையிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அவற்றை நுண் துகள்களாக்கி, தார்சாலை அமைக்கும் பணிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நதிகளைத் தாயாகவும், நதிகளின் தண்ணீரை புண்ணியத் தீர்த்தமாகவும், கொண்டாடும் நாடு, நமது நாடு. அந்த புண்ணியத் தீர்த்தத்தை, பூமிக்கு கொண்டு வரும் வள்ளல் தான், மழை.

மாண்புமிகு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், கைராசியும், முகராசியும், கொண்டவர் மட்டும் அல்ல. மழை ராசியும் கொண்டவர், நம் அம்மா அவர்கள்.

கஷ்டப்படும் போது கடவுளை நினைப்பது போல், தண்ணீர்ப் பற்றாக்குறை வரும் போது, மழையை நினைக்கிறோம். ஆனால் மாண்புமிகு அம்மா அவர்கள், தமிழக மக்கள் அனைவருக்கும், தடையின்றி குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற சிந்தனையோடு, எப்போதும் இருப்பதால், பெய்கிற மழையை பேணிக்காத்திட, தமது முந்தைய ஆட்சியிலேயே, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்தார்கள்.

இன்று உலகமே பாராட்டி, சீராட்டி செயல்படுத்தும் இத்திட்டத்தை, மாண்புமிகு அம்மா அவர்கள், 2003 ஆம் ஆண்டிலேயே, கொண்டு வந்து, மாநிலம் முழுவதும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கினார்கள்.

துளி நீரைக் கூட வீணாக்கக் கூடாது என்று, இத்திட்டத்தின் பெருமையை, துளிக் கூட எண்ணாமல், மாண்புமிகு அம்மா அவர்கள் தொடங்கிய திட்டம் என்ற, ஒரே காரணத்தால், கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சி, இம்மாபெரும் திட்டத்தினை முன்னிலைப்படுத்தவில்லை. இதனால், கோடை காலங்களில், நிலத்தடி நீர், வெகுவாக குறைய ஆரம்பித்தது.

மாண்புமிகு அம்மா அவர்கள், மூன்றாம் முறையாக, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, மீண்டும், மக்கள் இயக்கமாக மாற்றி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மற்றும் மாணவர்கள் சமுதாயத்தின் மூலமாகவும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாகவும், மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுவரை 70 லட்சத்து 39 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் எற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே அமைக்கப்பட்டு, கடந்த ஆட்சியாளர்களால், சரியாகப் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்ட, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணையின்படி, புனரமைக்கப்பட்டன.

மாண்புமிகு அம்மா அவர்கள், தொலைநோக்குச் சிந்தனையுடன் மேற்கொண்ட, நடவடிக்கையின் காரணமாக, மழைநீர் சேகரிப்பில், இந்திய நாட்டிற்கே, தமிழகம், ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது, என்பதைச் சமீபத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், புகழாரம் சூட்டியதை நினைவு கூர்ந்து, மாண்புமிகு அம்மா அவர்களின் தொலைநோக்கு சிந்தனையையும், சீரிய செயல்பாட்டையும் எண்ணி, தமிழ்நாடு பெருமை கொள்கிறது என்பதை, இப்பேரவையில் மிக்க பெருமிதத்தோடு, எடுத்துக் கூற விரும்புகிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின், """"தொலைநோக்கு திட்டம்-2023 ஆவணத்தின்படி"" தமிழ்நாட்டிலுள்ளஅனைத்து மக்களும், திறந்த வெளியில் மனிதக்கழிவு கழிக்கும் நிலை இல்லாத, மற்றும் குப்பை கூளங்கள் இல்லாத சூழலில், வாழ்வதை, உறுதி செய்வதே, குறிக்கோள் ஆகும்.

இம்மாபெரும் இலக்கினை எய்திடும் வகையில், மக்கள் திறந்தவெளியில் மனிதக் கழிவு கழிக்கும் பழக்கம், போன்றவற்றால் ஏற்படும், சுகாதாரச் சீர்கேடுகளைத் தவிர்க்க, போதுமான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தியும், திறந்தவெளியில் மனிதக் கழிவு கழித்தலினால், ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், அவர்களது செயல்பாடுகளில், மாற்றத்தினை ஏற்படுத்திடவும், பெரிய அளவிலான விழிப்புணர்வு திட்டம், மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையின்படி, துவக்கப்பட்டுள்ளது. மேலும் 2015-ஆம் ஆண்டுக்குள், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்திட மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு உறுதி பூண்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், 234.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1528 புதிய கழிவறை கட்டும் பணிகளும், பயன்பாட்டில் உள்ள 1995 பழைய கழிவறைகளில் புனரமைப்புப் பணிகள், எடுத்துக் கொள்ளப்பட்டு விரைவில் முடியும் தருவாயில் உள்ளது, என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும், கழிவறைப் பயன்பாட்டுத் தன்மையினை மேம்படுத்தும் நோக்கில், """"ஒரே மாதிரி கழிவறை - நம்ம டாய்லெட்"" என்கிற சிறப்பான கழிவறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மேலும் நிறுவப்பட்ட பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையின்படி, தமிழ்நாட்டில் கோடை காலத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையினைச் சமாளிக்கும் பொருட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ், மிகக் குறைந்த அளவு மழை பெறும் 11 மாவட்டங்களில், குடிநீர்த் திட்டப் பணிகள் 67.8 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், இதர 20 மாவட்டங்களில் 77.22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கடந்த 2011 ஆம் ஆண்டில், தமிழக மக்களின் பரிபூரண நம்பிக்கைப் பெற்று, மூன்றாவது முறையாக பதவியேற்ற நாள் முதல், இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டியாக, எத்தனையோ முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாக செயல்படுத்தி, தமிழ்நாட்டின் தாயாக விளங்குகிறார்கள்.

ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, எண்ணிலாத் திட்டங்களை, மாண்புமிகு அம்மாஅவர்கள், செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்திய திருநாட்டிலேயே முதன்முறையாக, குக்கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டு, ஒவ்வொரு குக்கிராமத்திலும் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கோடு, மாண்புமிகு அம்மா அவர்கள், 2011-12ஆம் ஆண்டில், தாய் திட்டம் என்ற தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில், """"அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்"" என்ற பெயரில், அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும், ஒரே மாதிரியாக, தலா 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், எந்தவொரு அடிப்படைத் தேவைகளையும், கிராம ஊராட்சிகளால், பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால், தாய் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் தேவையான, குடிநீர், தெருவிளக்குகள், சாலைகள், சுடுகாடு மற்றும் இடுகாடு மேம்பாடு, சுடுகாடு/இடுகாட்டிற்கான அணுகுசாலைகள், முதலான அடிப்படை வசதிகளை, முழுமையான அளவில் மேற்கொள்ள, குக்கிராமங்களின் எண்ணிக்கை

அடிப்படையில், ஒரு ஊராட்சிக்கு, 20 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை, ஒதுக்கீடு செய்யப்படுகிறது, என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்திட்டம் தொடங்கப்பட்ட, 2011-12ஆம் ஆண்டில், இதற்கென 680 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை மாண்புமிகு அம்மா அவர்கள் 2012-13 ஆம் ஆண்டு முதல் 750 கோடி ரூபாயாக, உயர்த்தி வழங்கி வருகிறார்கள்.

கடந்த மூன்றாண்டுகளில், மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி, 6,770 ஊராட்சிகளைச் சார்ந்த, 59,031 குக்கிராமங்களில், 1,45,960 பணிகள், ரூ.2,180 கோடி செலவில், நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல, இந்த ஆண்டிலும், 2,741 ஊராட்சிகளைச் சார்ந்த, 12,095 குக்கிராமங்களில், இத்திட்டம் 750 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சின்னஞ்சிறு குருவிக்கும், ஒரு கூடு இருக்கிறது. ஆனால் நமக்கு ஒரு வீடு இல்லையே என்று, ஏங்கித் தவித்த, கிராமப்புர ஏழைகளின், துன்பங்களைத் தீர்க்க, இந்திய நாட்டிலேயே முதன்முதலாக, 300 சதுர அடி பரப்பளவில், 1.8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சூரிய மின்சக்தியுடன் கூடிய, பசுமை வீடுகள் திட்டத்தை, மாண்புமிகு அம்மா அவர்கள், 2011-2012ஆம் ஆண்டில், அறிமுகப்படுத்தி, ஆண்டிற்கு 60,000 வீடுகள் வீதம், ஐந்து ஆண்டுகளில், 3 இலட்சம் வீடுகள் கட்டப்படும், என அறிவித்தார்கள். மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி, இத்திட்டத்திற்கான நிதி முழுவதும், மாநில அரசால் வழங்கப்படுகிறது.

2011-12 மற்றும் 2012-13 ஆகிய இரண்டு ஆண்டுகளில், 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள், 2,160 கோடி ரூபாய் செலவில், கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால், பயனாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களை அறிந்த, மாண்புமிகு அம்மா அவர்கள், 2013-14ஆம் ஆண்டு முதல், ஒரு வீட்டிற்கான அலகுத் தொகையை, 1.8 லட்சம் ரூபாயிலிருந்து, 2.1 இலட்சம் ரூபாய் ஆக உயர்த்தி ஆணையிட்டார்கள். அவ்வாறே, 2013-14ஆம் ஆண்டில், 60,000 வீடுகள் எடுக்கப்பட்டு, இதுவரை 55,898 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, என்பதை பெருமையோடு, இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில், ரூ.75,000 மதிப்பீட்டில் 210 சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டும், பயனாளிகள், தங்களது வீடுகளை, கட்டி முடிக்க இயலாமல், மிகுந்த சிரமப்பட்டனர். மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆணையின்படி, அந்த வீடுகளையும், முழுமையாக முடித்திட, 490 கோடியே 48 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, முடிக்கப்படாமலிருந்த, அனைத்து வீடுகளையும், கட்டி முடிக்க, மாண்புமிகு அம்மா அவர்கள், வழிவகை செய்துள்ளார்கள்.

2012-13ஆம் ஆண்டில், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ், 210 சதுர அடி பரப்பளவில், ஒரு வீடு கட்டுவதற்காக, மத்திய அரசு நிர்ணயித்த அலகுத் தொகை, ரூ.45,000/- ஆகும். 2013-14 ஆம் ஆண்டில், இத்தொகை ரூ. 70,000 ஆக, மத்திய அரசால் உயர்த்தப்பட்ட போது, ஒரு வீட்டிற்கு, மத்திய அரசின் பங்காக, 52,500 ரூபாயும், மாநில அரசின் பங்காக, 17,500 ரூபாயும் வழங்கிடும் வகையில், திட்டம் அமைந்தது. ஆனால், ஊரக ஏழை மக்களின் நலனில் அக்கறை கொண்ட, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மாநில அரசின் பங்கான, 17,500 ரூபாயுடன் கூடுதலாக, ஒவ்வொரு வீட்டிற்கும், 50,000 ரூபாய் அளித்து, ஒவ்வொரு வீடும், 1,20,000 ரூபாய் மதிப்பில், கட்டுவதற்கு ஆணையிட்டார்கள். அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் 3,00,399 வீடுகள் எடுக்கப்பட்டு, தற்போது 2,92,516 வீடுகள், கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில், மாநில அரசின் பங்காக, மொத்தம் ரூ.67,500 வழங்கி, அவ்வீட்டை 1,20,000 ரூபாய் மதிப்பில், கட்டி முடிக்க, மாண்புமிகு அம்மா அவர்கள், தாயுள்ளத்தோடு வழிவகை செய்துள்ளார்கள். ஆனால் குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மொத்த வீடும், 70,000 ரூபாய் மதிப்பிலேயே கட்டப்படுகிறது என்பதுடன் மாநில அரசால் கூடுதலாக தொகை ஏதும் வழங்கப்படுவதில்லை என்பதையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழகத்தில் மாபெரும் சுகாதாரப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு முன்னோடித் திட்டங்களை, தமது முந்தைய ஆட்சிக் காலத்திலேயே, அறிமுகப்படுத்தினார்கள். அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள மகளிர் சுகாதார வசதிகளுக்கு, முக்கியத்துவம் அளித்து, 12,796 மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.

ஆனால், மாண்புமிகு அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற காரணத்தால், கடந்த மைனாரிட்டி திமுக அரசு, இத்திட்டத்தை செயல்படுத்த, எந்த ஒரு முனைப்பையும் காட்டாது, கிடப்பில் போட்டதால், சுகாதாரத் திட்டங்களில் முன்னோடியாக திகழ்ந்த தமிழகத்தின் நிலையில், பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டது.

2011 ஆம் ஆண்டில், மாண்புமிகு அம்மா அவர்கள், மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அந்நிலையினைப் போக்கி, சுகாதாரத்தில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு மீண்டும் திகழும் வகையில், பாழடைந்த நிலையில் பயன்பாடற்றுக் கிடந்த, 12,796 மகளிர் சுகாதார வளாகங்கள், 170 கோடி ரூபாய் செலவில், புனரமைக்க ஆணையிட்டதுடன், பணிகளை விரைந்து முடித்து, சுகாதாரப் புரட்சிக்கு, புத்துயிர் ஊட்டினார்கள்.

அதேபோல, ஊரகப் பகுதிகளில், முழு சுகாதாரத்தை அடைய ஏதுவாக, """"துhய்மையான கிராம இயக்கத்தினை"" 2003 ஆம் ஆண்டில் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். இந்தத் திட்டத்தினை, முன்மாதிரியாகக் கொண்டுதான், மத்திய அரசு நிர்மல் கிராம புரஸ்கார் என்ற விருதினை, அறிவித்தது என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதுடன், இத்திட்டத்தினை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்கள் என்பதை, இந்த அவைக்குத் தெரிவிப்பதில், மகிழ்ச்சி அடைகிறேன்.

ஊரகப் பகுதியில் உள்ள, ஆண்களின் சுகாதார தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் அமைத்திட, ஆணையிட்டதன் அடிப்படையில், 2012-13ஆம் ஆண்டில், 770 ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள், 35 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, அனைத்தும் பயன்பாட்டில் உள்ளன, என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2015 ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டை திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாநிலமாக மாற்றிட, சிறப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டில், சுமார் 5 இலட்சம் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல 2014-15 ஆம் ஆண்டில், 17 இலட்சம் கழிப்பறைகள் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊரகப் பகுதிகளில் கல்வி மேம்பாட்டிற்காக, ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்குத் தேவைப்படும், குடிநீர் வசதி, புதிய கட்டடங்கள், கழிப்பறைகள், சமையற்கூடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தருவதுடன், ஏற்கெனவே உள்ள கட்டடங்களில், பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகளும், மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ், கடந்த

3 ஆண்டுகளில், 10,285 புதிய பணிகளும், 19,248 பழுதுபார்த்தல் பணிகளும் 282.97 கோடி ரூபாய் செலவில், மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் அடிப்படைத் தேவைகளை, நிறைவு செய்திட ஏதுவாக, வழங்கப்பட்டு வந்த 1.75 கோடி ரூபாய் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிiனை, 2011-12 ஆம் ஆண்டு முதல், 2 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டார்கள், என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், 1,43,077 கி.மீ. நீளமுள்ள சாலைகள் உள்ளன. இவற்றில், 86,061 கி.மீ. நீளமுள்ள சாலைகள், தார்சாலைகள் ஆகும். மீதமுள்ள, 57,016 கி.மீ. நீளமுள்ள சாலைகள், மண், சரளை மற்றும் கப்பிச் சாலைகள் ஆகும். இவற்றில், முக்கியமான சாலைகள் அனைத்தும், ஊரக மக்களின் பயன்பாட்டிற்காக, தார்ச் சாலைகளாக மாற்றப்பட வேண்டும், என மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம், 41,326 கி.மீ நீளமுள்ள சாலைகளை, தார்ச்சாலைகளாக மாற்றுவதற்கு, 7,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால், முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில், சாலைப் பணிகளுக்கு 4,740 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மாண்புமிகு அம்மா அவர்கள், கடந்த 3 ஆண்டுகளில், 3,101 கோடி ரூபாய் அதிகமாக வழங்கி சாதனை படைத்துள்ளார்கள், என்பதை பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற, 2011ஆம் ஆண்டு முதல், இதுவரை, ஊரகப் பகுதிகளில், 252 பாலங்கள் அமைத்திட, 346.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் 5 ஆண்டு காலத்தில், 37 பாலங்கள் வெறும் 21.41 கோடி மதிப்பீட்டில்தான், எடுக்கப்பட்டது. அதாவது, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியின் மூன்றாண்டு காலத்தில், ஒதுக்கீடு செய்த தொகை, முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட, 325 கோடியே 42 லட்சம் ரூபாய் அதிகமாகும் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பல்வேறு ஊரக வளர்ச்சித் திட்டங்களின் கீழ், 717 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில், பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி, 5710 கி.மீ. நீளமுள்ள சாலைகள், தார்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், இந்திய அளவில், மிகச் சிறப்பான முறையில், செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதுடன், மற்ற மாநிலங்களுக்கெல்லாம், முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்திட்டத்தின்கீழ், மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, கடந்த 2013-14ஆம் ஆண்டில், இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பெறும் வகையில், பல சாதனைகளைப் படைத்துள்ளது.

· 2013-14ஆம் ஆண்டில், 37.29 கோடி மனிதசக்தி நாட்களை எய்தி, இந்தியாவிலேயே, தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

தொழிலாளர்களுக்கான ஊதியமாக, 3808.24 கோடி ரூபாய் வழங்கி, இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது

பெண்கள் பங்கேற்பில், சதவிகித அடிப்படையில், இரண்டாவது இடத்தை (84ரூ) தமிழ்நாடு பெற்றுள்ளபோதிலும், மகளிரைக் கொண்டு, 30.7 கோடி மனிதசக்தி நாட்கள் எய்தியதன் மூலம், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

ஒரு குடும்பத்திற்கு, 47 வேலை நாட்கள் என்பது, தேசிய சராசரி ஆகும். ஆனால் தமிழ்நாட்டில், சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 59 நாட்கள் வேலைவாய்ப்பினை வழங்கி, இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

10.7.2014 அன்று, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதை, மிகுந்த மகிழ்ச்சியுடன், இப்பேரவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு ஊராட்சியில் பல பணிகள்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், 2011 ஆம் ஆண்டில், மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், கிராம மக்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், ஒரு ஊராட்சியில் ஒரு பணி மட்டுமே என்ற நிலையினை மாற்றி, ஒரு ஊராட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை எடுத்துச் செய்திட, ஆணையிட்டார்கள். இதன் காரணமாக, 2013-14ஆம் ஆண்டில், 62.67 இலட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ணைக் குட்டைகள்

விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, டெல்டா மாவட்டங்களில், 15,000 பண்ணைக் குட்டைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்டா அல்லாத பிற மாவட்டங்களிலும், இதுவரை, 13,784 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2013-14ஆம் ஆண்டில், 1,459 ஹெக்டேர் கிராம ஊராட்சி நிலங்களில், பலவகை மரக்கன்றுகளும், 4,000 ஹெக்டேர் பரப்பளவில், கருவேல மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. மேலும், 2,452 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊராட்சி ஒன்றியச் சாலைகளில், பலவகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே, முதன்முறையாக, அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில், மாற்றுத் திறனாளிகளும், பங்கேற்று பணிபுரிந்திட ஏதுவாக, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆணையிட்டார்கள். அதன்படி, 2012, 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளில், மாற்றுத் திறனாளிகள் மூலம் 72.3 லட்சம் மனிதசக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு, 107 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அம்மா அவர்கள், மேற்கொண்ட இந்த முன்னோடி முயற்சியை, மத்திய சுகாதார அமைச்சகம் பெரிதும் பாராட்டியதோடு, இதர மாநிலங்களும், இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என, மத்திய அரசால் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது என்பதை, மிகுந்த பெருமையோடு, தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை, சிறப்பாக செயல்படுத்தியதற்காக, சிறந்த மாவட்டத்திற்கான விருது, 2011-12ஆம் ஆண்டில், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களுக்கும், 2012-13ஆம் ஆண்டில், நீலகிரி மாவட்டத்திற்கும், கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, 2011-12ஆம் ஆண்டில், சிறந்த ஊராட்சிகளுக்கான விருது, கோயம்புத்துhர் மாவட்டத்தைச் சார்ந்த காடம்பாடி ஊராட்சிக்கும், 2012-13ஆம் ஆண்டிற்கான விருது, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த தாணிக்கோட்டகம் ஊராட்சிக்கும் வழங்கப்பட்டது.

மேலும், 2012-13ஆம் ஆண்டில், """"சமூக பங்களிப்பு"" என்ற வகைப்பாட்டின் கீழ், சிறந்த மாநிலமாக, தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசால், விருது வழங்கப்பட்டுள்ளது என்பதை, பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2014-15ஆம் ஆண்டில், இத்திட்டத்தை செயல்படுத்த, தேசிய அளவில், 33,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில், மாண்புமிகு அம்மா அவர்களின் சீரிய முயற்சியால், தமிழ்நாட்டிற்கு மட்டும், 38.31 கோடி மனித சக்தி நாட்களை உருவாக்கிடும் வகையில், 6,398 கோடி ரூபாய், அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில், 19.4 விழுக்காடு ஆகும்.

தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில், குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்திட, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, போதுமான மழையில்லாத நிலையிலும், குடிநீர்த் தேவையினைச் சமாளித்திட, பல்வேறு ஊரக வளர்ச்சித் திட்டங்களின் கீழ், 1185 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில், 83,334 குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில், 2,202 கோடி ரூபாய் செலவில், 1,49,936 குடிநீர் பணிகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2006-2011 வரையிலான 5 ஆண்டுகளில், ஊரகப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்திற்காக, 732 கோடியே 68 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் அரசு, ஊராட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்கி, அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2011-12ஆம் ஆண்டில், 3,332 கோடியே 47 லட்சம் ரூபாய், 2012-13ஆம் ஆண்டில் 4068 கோடியே 11 லட்சம் ரூபாய் மற்றும் 2013-14ஆம் ஆண்டில் 4737 கோடியே 69 லட்சம் ரூபாய் நிதி, மாநில நிதிக்குழு மானியமாக, விடுவிக்கப்பட்டுள்ளது என்பதனை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறைந்த வருவாய் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு உதவிடும் வகையில், ஏற்கனவே 3 லட்சம் ரூபாயாக வழங்கப்பட்டு வந்த குறைந்தபட்ச மானியத்தை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி மாண்புமிகு அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு, 2013-14ஆம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதுபோன்றே, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும், குறைந்தபட்ச மானியமாக, 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாது, மக்கள் தொகை அடிப்படையிலும், ஊராட்சி அமைப்புகளுக்கு, மாநில நிதிக்குழு மானியம் விடுவிக்கப்படுகிறது, என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி, 2013-14 ஆம் நிதியாண்டில், ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியாக, 626 கோடியே 45 லட்சம் ரூபாய் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 313 கோடியே 22 லட்சம் ரூபாய், ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், விடுவிக்கப்பட்டுள்ளது என்பதை, தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுப்பங்கரையில் அடைபட்டுக்கிடந்த பெண்கள் சமுதாயத்தை, வெளி உலகத்திற்கு அழைத்து வந்து, நிமிர்ந்த நன்னடையோடும், நேர்கொண்ட பார்வையோடும், நடைபழக வைத்து, அவர்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்குடன், வாழ்வாதாரம் உறுதிபடவும், பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்திடவும், மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தி, பெண்கள் வாழ்வில், ஒரு திருப்புமுனை ஏற்படுத்தித் தந்தவர் நமது மாண்புமிகு அம்மா அவர்கள்.

மாண்புமிகு அம்மா அவர்கள், அன்று இட்ட விதை முளைத்து, ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி, பெண்கள் வாழ்வில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது, 5.86 லட்சம் சுய உதவிக்குழுக்கள், 88.70 லட்சம் மகளிர் உறுப்பினர்களைக் கொண்டு, மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, வங்கிகள் மூலம், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 14,097 கோடி ரூபாய், கடன் இணைப்பு வழங்கி, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் அரசு, சாதனை படைத்துள்ளது என்பதை, பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டில், கல்லூரி சந்தைகள் மற்றும் மாநில கண்காட்சிகள் மூலம், 4 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, விற்பனை செய்துள்ளனர். தொட்டதெல்லாம் துலங்க வைக்கும், மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில், தெருக்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை, மறுசுழற்சி செய்து, தார்சாலை அமைத்திட, விற்பனை செய்ததன் மூலம், ஏழை மகளிர், 94 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், வருமானம் ஈட்டியுள்ளனர் என்பதையும், தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, 2013-14 ஆம் ஆண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிலிருந்து, 3,176 மகளிர், வங்கி முகவர்களாக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில், 44,704 இளைஞர்களுக்கு தொழிற் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதில் 7000 இளைஞர்கள், கணிணி பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், 8,091 பெண்களுக்கு, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டது என்பதையும், தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், தமது முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கிய, புதுவாழ்வு திட்டத்தின் கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளைப் பின்பற்றி, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தினை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வியக்கம், தமிழ்நாட்டில், 265 வட்டாரங்களில் உள்ள, 8,350 கிராம ஊராட்சிகளில், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ், 3,760 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், அமைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, 2013-14 ஆம் ஆண்டில், ஒரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு, ரூபாய் 10 இலட்சம் வீதம், சமுதாய முதலீட்டு நிதி வழங்க, ஆணையிடப்பட்டு, அதில் 2,390 வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு முதல் தவணையாக 4 இலட்சம் ரூபாய் வீதம், 95.6 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், தமது முந்தைய ஆட்சிக் காலத்தில், 2005 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் வறுமையை ஒழித்திட, புதுவாழ்வு என்னும் புதுமைத் திட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால், தமிழக மக்கள் புதுவாழ்வினைப் பெற்றிடக் கூடாது என்று நினைத்த, முந்தைய மைனாரிட்டி திமுக அரசு, அந்தப் பெயரையே மாற்றிவிட்டது. மாண்புமிகு அம்மா அவர்கள், 2011 ஆம் ஆண்டு, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், புதுவாழ்வுத் திட்டம் முனைப்புடன் முடுக்கிவிடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தின் 26 மாவட்டங்களில் உள்ள, 4,174 கிராம ஊராட்சிகளில், இதுவரை 4,465 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இத்திட்டத்தின் வாயிலாக, 1,06,615 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதில் 14,42,015 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில், 8,138 மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக் குழுக்களும், 5,358 மாற்று திறனாளிகள் குழுக்களும், அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 959 கோடியே 38 லட்சம் ரூபாய் கடன் இணைப்பு வழங்கி, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு சாதனை படைத்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், 64,186 மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர், வாழ்வாதார செயல்பாடுகள் தொடங்க, 65 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் 1,44,924 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, 1,08,736 இளைஞர்கள் பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு அம்மா அவர்கள், அறிமுகப்படுத்திய சீரிய திட்டமான, புதுவாழ்வு திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளை, உலக வங்கியே பாராட்டியுள்ளது மட்டுமல்லாமல், இத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும், முன்னோடியாக உள்ளது என்பதையும், மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊரக வளர்ச்சித் திட்டங்களின் விரைவான செயல்பாட்டினை உறுதி செய்திட ஏதுவாக, இளநிலை உதவியாளர் முதல் செயற்பொறியாளர் வரை, கடந்த மூன்றாண்டுகளில், 5010 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

அத்துடன், மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், 9.4.2013 அன்று, சட்டப் பேரவையில் அறிவித்தபடி, 16,726 துப்புரவுப் பணியாளர்கள் கிராம ஊராட்சிகளில், புதிதாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பதையும், மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்