முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது டெஸ்ட் தொடக்கம்: காம்பீர் - அஸ்வீனுக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மான்செஸ்டர், ஆக.07 - இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மானசெஸ்டரில் இன்று தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சவுத்தம்டனில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 266 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இன்றய போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடக்க வீரர் தவானின் ஆட்டம் கவலை அளிக்கும் வகையில் மோசமாக இருக்கிறது. இதனால் அவருக்கு பதிலாக சீனியர் வீரரான கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம், காம்பீர் கடைசியாக 2012-ஆம் ஆண்டு டெஸ்டில் விளையாடினார். இதேபோல் அணியின் முதன்மை சுழர்பந்து வீரரான அஸ்வினுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். கடந்த 3 டெஸ்டிலும் அவர் இடம் பெறவில்லை. ஜடேஜா அல்லது ரோகித் சர்மா நீக்கப்படலாம்.

கணு்ககால் வீக்கத்தால் அவதிப்பட்டு வந்த புவனேஸ்வர்குமார் அதில் இருந்து குண்மடைந்து வருகிறார். இஷாந்த் சர்மா உடல் தகுதி பெறாததால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடமாட்டார். லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அவர் கடந்த டெஸ்டில் காயம் காரணமாக ஆடவில்லை. அவரது இடத்தில் இடம் பெற்ற புதுமுக வீரர் பங்கஜ் சிங்கால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த இயலவில்லை. இதனால் பங்கஜ்சிங்குக்கு பதிலாக வருண் ஆரோனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி இந்த டெஸ்டில் வெல்லலாம். வெற்றி பெற முடியாவிட்டாலும் தொடரை சமன் செய்ய டிரா செய்யும் வகையில் ஆடலாம். புஜாரா, வீராட் கோலி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருவரும் சிற்பபாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டிய நெரிக்கடி இருக்கிறது. இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலும் வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இன்றைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

வீரர்கள் விவரம்:

இந்தியா: டோனி (கேப்டன்), முரளிவிஜய், ஷிகார் தவான், புஜாரா, வீராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, புவனேஸ்வர்குமார், முகமது சமி, பங்கஜ்சிங், அஸ்வின், ஸ்டுவர்ட் பின்னி, இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், நமன் ஒஜா, ஈஸ்வர் பாண்டே.

இங்கிலாந்து: கூக் (கேப்டன்), ராப்சன், பேலன்ஸ், இயன்பெல், ஜோரூட், மொய்ன் அலி, பட்லர், வோக்ஸ், ஆண்டர்சன், ஸ்டீவன்பின், ஸ்டுவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்