முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படபிடிப்பில் விபத்து நடிகர் பாலகிருஷ்ணா காயம்

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable


நகரி, ஆக.10 - என்.டி.ராமாராவ் மகனும் தெலுங்கு முன்னணி நடகிருமான பாலகிருஷ்ணா பெயர் சூட்டாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை ருத்ரபாட்டி ரமணாராவ் தயாரிக்கிறார். சத்திய தேவ் டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. சண்டை காட்சி ஒன்றில் பாலகிருஷ்ணா நடத்துக் கொண்டு இருந்தார். இதில் ஒரு காரை கயிறு கட்டி மேலே தூக்குவது போன்ற காட்சி இடம் பெற்றது. அப்போது கயிறு அறுந்து கார் பாலகிருஷ்ணா இடது காலில் விழுந்தது.
இதில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக எலும்பு முறிவு ஏற்படவில்லை. உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள காமினேனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எலும்பு முறிவு இல்லாததால் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்