முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை நிறைவு: 4 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable


ஸ்ரீநகர், ஆக.12 - இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலுக்கு பக்தர்கள் மேற்கொண்டு வந்த யாத்திரை நிறைவடைந்தது. இந்த யாதத்ிரையில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்தனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலையில், கடல் மட்டத்தில் இருந்து 3,800 மீட்டர் உயரத்தில் அமைந்துளஅள அமர்நாத் குகைக் கோயிலுக்கான பக்தர்களின் யாத்திரை கடந்த ஜுன் மாதம் 28-ஆம் தேதி தொடஙஅகியது. அன்றிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையான பனியால் உருவான சிவலிங்கத்தை தரிசித்து வந்தனர். இந்திலையில் இந்த யாத்திரை பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் நிறைவடைந்தது. இந்த யாத்திரையின்போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 36 பக்தர்கள் உள்ள 46 பேர் உயிரிழந்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒரு வர் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னர் என்.என்.வோரா, மஹந்த் திபேந்திர கிரி தலைமையிலான சாதுக்கள் சிவனின் புனித குவா யுதத்தை ஏந்திச் சென்று அமர்நாத் கோயிலில் ஒப்படைத்தனர் .  யாத்திரையின் நிறைவு நாளையொட்டி அமர்நாத் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்