முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக ஜூனியர் செஸ்: 65 நாடு வீரர்கள் பங்கேற்கிறார்கள்

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புனே.ஆக 13 - பெருமைக்குரியதும் உலகளாவிய மிக முக்கிய செஸ் போட்டிகளில் ஒன்றான உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி புனேயில் நடைபெற இருக்கிறது. 2014 அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிவரை நடைபெறும் அந்தப் போட்டியில் 65 நாடு களைச்சேர்ந்த 250 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். புனேயில் விமான் நகரில் உள்ள ஹயாட் ஓட்டலில் நடைபெறும் அந்த 15 நாள்போட்டியில் கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச மாஸ்டர்கள் பங்கு பெறுகிறார்கள்.

5 முறை உலக சாம்பியனாகத் திகழ்ந்த ஜிஎம்.விஸ்வநாதன் ஆனந்த், மகாராஷ்டிர மாநில செஸ் சங்கத் தலைவர் அசோக்ஜெயின், துணைத் தலைவர் மற்றும் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் தலைவருமான அனிருத் தேஷ்பாண்டே ஆகியோர் இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்த உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மகாராஷ்டிர செஸ் சங்கம், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் சார்பிலுள்ள புனே மாவட்ட செஸ் சர்க்கிள்,உலச செஸ் கூட்டமைப்பு ஆகியவைகள் இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டி இரண்டு வகை யாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொதுவானதும், பெண்களுக்குமானதுமாகும் அந்த இரண்டு வகை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுற்று என்கிற வகையில், 13 சுற்றுகளைக் கொண்ட சுவிஸ் லீக் வகையில் இந்த போட்டிகள் நடைபெறும். இந்த இரண்டு வகை போட்டிகளி லும் வெற்றி பெறுபவர்கள் முறையே கிராண்ட் மாஸ்டர் மற்றும் பெண்கள் கிராண்ட் மாஸ்டர் என்கிற பட்டத்தைப் பெறுவார்கள். அத்துடன் அவர்கள் உலக சாம்பியன்ஷிப் வரிசையில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்த வர்களாக இருப்பார்கள். அத்துடன் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.6 லட்சம் பரிசு வழங்கப் படும். அத்துடன் சிறப்பு அங்கீகாரமாக, நல்லமுறையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு புனே மேயரின் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.

மகாராஷ்டிர மாநில செஸ் சங்கத்தின் தலைவர் அ`சோக் ஜெயின் இதுபற்றி குறிப்பிடு கையில், எங்களது சங்கம் தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் போட்டிகள் நடத்து வதில் மிகவும் தீவிரமாக இருக்கும். நாட்டின் முதல்நிலை லீக் என்று கருதப்படும் மகாராஷ்டிர செஸ் லீக் உருவாகவும் நாங்கள் காரணமாக இருந்துள்ளோம். செஸ விளை யாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். பள்ளிகளில் செஸ் கல்வி கற்றுத்தர ஏற்பாடுகள் செய்துள்ளோம். தற்போது 186 பள்ளிகளில் 9500 மாணவர்கள் இந்தத் திட்டத்தில் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளார்கள். எங்களது குறிக்கோள் விரைவில் 500 பள்ளிகளில் 50 ஆயிரம் மாணவர்களை இன்னும் ஓரிரு ஆண்டில் இதில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்பதாகும் என்றார்.

இந்தப்போட்டிகளில் பங்கேற்பது ஒவ்வொரு நாடுகளின் தனிஉரிமை என்றும், தங்கள் நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை பங்கேற்கச் செய்யலாம் என்று தேஷ் பாண்டே இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் குழுவில், தலைசிறந்த செஸ் வீரர்கள்,பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த அசோக் ஜெயின், ரவிந்திர டோக்ரா, உலக செஸ் கூட்டமைப்பின் மண்டல தலைவர்கள், பொருளாளர்கள், அகில இந்திய செஸ் சங்கத் தினர், மகாராஷ்டிர செஸ் சங்கத்தின் தலைவர், சித்தார்த் மயூர், புளே சங்கத் துணைத் தலைவர், செயலாளர் நிரன்ஜன் கோட்போலே, சஞ்சய் கராவாடே,திலிப் பாகாய் செய லாளர் மற்றும் கிராண்ட் மாட்ர் அபிஹிட் குண்டே, பிரகாஷ் குண்டே, மொரேஸ்வர் பகவத் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும். இதற்கு முன்னர் 1993 ல் கோழிக்கோட்டிலும், 2004ல் கொச்சி யிலும், 2011ல் சென்னையிலும் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில், உலக சாம்பியன்களான, போரிஸ் ஸ்பாஸ்கி, அனடோலி கார்பொவ், காரி காஸ்பரோவ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் இதுபோன்ற உலக ஜூனிநர் அளவிலான போட்டிகளில் இருந்துதான் உருவானார்கள் என்பது தான் இந்த 20 வயதிற்குள்ளானவர்களுக் கான போட்டியின் முக்கியத்துவமாகும். 1987 உலக ஜூனியர் அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர்தான், நான்கூட இதுபோன்ற போட்டிகளில் நுழைய முடிந்தது. பெண்டயாலா ஹரிகிருஷ்ணன், அபிஹிட் குப்தா, கொநேரு ஹம்பி, டுரோனவல்லி ஹரிகா மற்றும் சௌம்யா சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களும் இவ்வாறு கடந்த காலங்களில் வெற்றி பெற்றவர்களாகும்.என்றார்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago