முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

புதன்கிழமை, 13 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.14–நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் அகற்ற கோரிய வழக்க்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சிரில் அலெக்ஸ்சாண்டர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகர் தனுஷ், நடிகை அமலாபால் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் கடந்த ஜூலை 18–ந்தேதி வெளியானது. இந்த படத்தில், புகைப்பிடிக்கும் காட்சிகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளது.

திரையில் அந்த காட்சிகள் வரும்போது, புகைப் பிடிப்பதால் உடல் நலத்துக்கு கேடு என்ற வாசகம், மிகவும் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகம் படம் பார்ப்பவர்களின் கண்ணில் படும் அளவுக்கு இல்லை.

எனவே, இந்த காட்சிகளை நீக்கவும், இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு கடந்த ஜூலை 25–ந் தேதி மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து, மனுதாரர் அரசுக்கு புகார் அனுப்பி அடுத்த சில நாட்களில் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு நடவடிக்கை எடுக்க அவகாசம் வழங்காமல், இந்த வழக்கு தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்