முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கில் மாற்றம்: ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.15 - 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரித்து வந்த அதிகாரியை மாற்றியது, விசாரணையை நிறுத்தக் கோரியது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஐஜி சந்தோஷ் ரஸ்தோகி இருந்தார். அவர் அப்பதவியில் இருந்து மாற்றப் பட்டுள்ளார். 2ஜி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கள் எச்.எல்.தத்து, பி.சி.கோஸ், எஸ்.ஏ.பாப்தே ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டதாவது:

2ஜி வழக்கின் விசாரணை அதி காரி மாற்றப்பட்டுள்ளார். மேலும், அவர் அரசு சிறப்பு வழக்கறி ஞராக இருந்த யு.யு.லலித்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா 2ஜி வழக்கில் சில புதிய ஆதாரங்களையும், உண்மை களையும் கண்டுபிடித்துள்ளார். அந்த தகவல்கள் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்தி ரிகைக்கு முரண்படும் விதமாக உள்ளது. எனவே, தற்போதைய வழக்கு விசாரணையை நிறுத்தி விட்டு, அனில் தீருபாய் அம்பானி யின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவன இயக்குநர்கள் மற்றும் டிபி ரியாலிடி நிறுவனத்தின் ஷாஹித் பல்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மாற்ற வேண்டும். வழக்கை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு யு.யு.லலித் கோபமாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மூன்று ஆண்டுகளாக நடந்துவரும் 2ஜி வழக்கு விசாரணையை முற்றிலுமாக சிதைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப் பில் உள்ள வழக்கின் விசாரணை அதிகாரியை எப்படி தன்னிச் சையாக மாற்றலாம் என்று சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணு கோபாலிடம் கேள்வி எழுப்பினர். அப்படி செய்திருந்தால் உடனே அந்த மாற்றல் உத்தரவை வாபஸ் பெறச் சொல்லுங்கள் என்று உத்தர விட்டனர்.

மேலும், வழக்கை நிறுத்தக் கோரி, சிபிஐ தரப்பில் எழுதப் பட்ட கடிதம், அதற்கு அரசு சிறப்பு வழக்கறிஞர் எழுதிய பதில் கடிதம், அதிகாரிகளின் குறிப்பு கள் உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் செப்டம்பர் 1-ம் தேதிக் குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்