முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.1,49,474 கோடி!

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.15 - ரிலைன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட 5 பேரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.5,22,897 கோடி என்று ஆய்வுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவில், பாதிப் பேரின் சொத்துகளுக்கு சம்மானது என்று வெல்த் எக்ஸ் என்ற அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கல் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு குறித்து வெளியிட்டுள்ளஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரராக ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானிதான் தொடர்ந்து உள்ளார். அவருக்கு ரூ.1,49,474 கோடி சொத்துகள் உள்ளன. அவனரைத் தொடர்ந்து உருக்கு தொழில் அதிபர் லட்சுமி மித்தல், சன் பார்மா அதிபர் திலிப் சங்வி, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி, டாடா சன்ஸ் பங்கு தாரர் பல்லோன்ஜி ஷபூர்ஜி மிஸ்த்ரி ஆகியோருக்கு அதிக சொத்துகள் உள்ளன. லட்சுமி மித்தலிடம், 17.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. திலிப் சங்கவியிடம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளும், அஸிம் பிரேம்ஜியிடம் 14.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளும், மிஸ்த்ரியிடம் 12.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.

இவர்கள் 5 பேரிடமும், சுமார் ரூ.5,23,887 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அதாவது, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களிடம் இருக்கும் சொத்துகளில், 47.5 சதவீத சொத்துகள் இவர்கள் 5 பேரிடமும் உள்ளன என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்