முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குநர் கே.பாலச்சந்தரின் மகன் கைலாசம் காலமானார்

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.16- இயக்குநர் கே பாலச்சந்தரின் மகன் கைலாசம் காலமானார். இயக்குநர் கே பாலச்சந்தரின் மகன் கைலாசம் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 53.

பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த பல படங்களில் தயாரிப்பாளராக இருந்துள்ளார். மின் பிம்பங்கள் என்ற நிறுவனத்தை துவங்கி தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வந்தார். காச நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் அவர் மரணமடைந்தார். கைலாசத்துக்கு கீதா என்ற மனைவியும், விலாசினி என்ற மகளும், விஷ்ணு பாலா என்ற மகனும் உள்ளனர். தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி இவரது சகோதரி. கைலாசத்தின் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்