முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, ஆக.17 - தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் சாமி தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆகிறது

தொடர்ந்து 4 நாட்கல் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்கள், பாதயாத்திரையாகவும் பல்களிலும் திருமலைக்கு வருகின்றனர். நேற்று முன் தினம் முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் மாலை முதல் இலவச தரிசனத்துக்கான வைகுண்ட மையத்தில் உள்ள 31 அரைகள் நிரம்பி சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆனது.

அதேபோல் பாதயாத் திரையாக வழியாக வரும் திவ்ய தரிசன பக்தர்கள் 20 மணி நேரத்தில் சாமி தரிசம் செய்தனர். கூட்டம் அதிகரித்து கொண்டே வந்ததால் ரூ.300 கட்டணம் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது. சிறப்பு தரிசனத்தில் காத்திருந்த பக்தர்களும் இலவச தரிசனத்தில் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

கடந்த 3 நாட்களில் முகூர்த்த நால் இருந்த தால் திருமலையில் ஆயிரத்துக்கும் மேர்பட்ட திருமணங்கள் நடந்துள்ளது. திருமணத்துக்கு வந்த குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்ததால் தரிசனத்திற்கான நேரம் அதிகமானது. அதிகளவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தால் அவர்களுக்கு தேவையான சிற்றுண்டி உணவு, பால், மோர், ஆகியவற்றை அன்னதான திட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரடியாக சென்று வழங்கினர். வரும் நாளை கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி விடுமுறை நாள் இதனாள் வெள்ளி, சன்னி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று முதல் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தங்கும் அறைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பல மணி நேரம் வரிசையில் காத்திரிந்து அறைகளை பெற்று வருகின்றனர் மேலும் இரவு நேரத்தில் திருமலையில் காலியாக உள்ள பல்வேறு இடங்களில் உறங்கி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்