முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரெயில்கள்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.18 - வேளாங்கண்ணி திருவிழாவினை முன்னிட்டு மும்பை, நெல்லை, திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

நெல்லை–வேளாங்கண்ணி

வருகிற 28–ந்தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 8.50 புறப்படும் திருநெல்வேலி–வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06701), மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும். அதேபோல, மறுமார்க்கமாக 29–ந்தேதி வேளாங்கண்ணியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி–திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06702) மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

இந்த சிறப்பு ரெயிலானது வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், ‘மதுரை’, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.

திருவனந்தபுரம்–வேளாங்கண்ணி

வருகிற 27–ந்தேதி திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 3.30 புறப்படும் திருவனந்தபுரம்–வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06302), மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும். அதேபோல, மறுமார்க்கமாக 28–ந்தேதி வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி–திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06301) மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு திருவனந்தபுரத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரெயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.

மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

மும்பையில் இருந்து

மேலும், சென்னை எழும்பூர் வழியாக செல்லும் வகையில் வருகிற 26–ந்தேதி மும்பை லோக்மான்ய திலக்–வேளாங்கண்ணி சிறப்பு ரெயிலும்(01029), மறுமார்க்கமாக 28–ந்தேதி வேளாங்கண்ணி – லோக்மான்ய திலக் சிறப்பு ரெயிலும்(01030) இயக்கப்பட உள்ளன. அதேபோல, 27–ந்தேதி பாந்த்ரா டெர்மினஸ்–வேளாங்கண்ணி (06302) சிறப்பு ரெயிலும், மறுமார்க்கமாக 28–ந்தேதி வேளாங்கண்ணி–பாந்த்ரா டெர்மினஸ் சிறப்பு ரெயிலும்(06301) அன்றைய தினம் (சென்னை எழும்பூர் வழியாக) இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago