முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்: ரஜினி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை.ஆக.18 - கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து வரும் 'லிங்கா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மங்களூர் அருகிலுள்ள ஷிமோகாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மங்களூர் விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர்.

அப்போது அவர் கூறிய பதில் வருமாரு:-

'லிங்கா' படம் எனது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை எனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அளிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார். தொடர்ந்து, ரஜினியிடம் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசியலுக்கு நான் வர கடவுள் விரும்பினால் நிச்சயம் வருவேன். கடவுளின் விருப்பம்தான் என்னுடைய விருப்பம் என்று கூறினார்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் கஜபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து 21 நாட்கள் மங்களூருவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago