முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி முன்பதிவு: தொடங்கிய சில நிமிடத்திலேயே முடிந்தது

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 19 – தீபாவளி பண்டிகை இந்த வருடம் அக்டோபர் மாதம் 22–ந் தேதி (புதன்கிழமை) வருவதால் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ரெயிலில் முன்பதிவு செய்ய ஆர்வத்துடன் காத்து இருந்தனர்.

60 நாட்களுக்கு முன்பு பயணம் செய்தற்கு ரெயிலில் முன்பதிவு செய்ய வேண்டும். அக்டோபர் 17–ந் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்வதற்கு முன்பதிவு இன்று தொடங்கியது.

அக்டோபவர் 18–ந் தேதி (சனி) 19–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாகும்.

20–ந் தேதி (திங்கள்) மற்றும் 21–ந் தேதி (செவ்வாய்கிழமை) இடையில் இருப்பதால் கடைசி நேர பயணத்தை தவிர்க்கும் வகையில் சிலர் இன்று முன்பதிவு செய்தனர்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தென்காசி ஆகிய நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களுக்கு முன்பதிவு செய்ய வந்திருந்தனர்.

தீபாவளிக்கு 5 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு நடந்ததால் விறு விறுப்பு இல்லாமல் இருந்தது. வார இறுதி நாள் வெள்ளி என்பதால் அக்டோபர் 17–ந் தேதிக்கு ஒரு சில ரெயில்களில் இடம் இன்னும் இருக்கிறது.

நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலுக்கு தற்போது வந்து விட்டது. பாண்டியன் எக்ஸ்பிரஸ் 2–ம் வகுப்பு படுக்கை வசதியில் 195 இடங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.

3 அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதியும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.

நெல்லை எக்ஸ்பிரசில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி ஆர்.ஏ.சி. – 20–ல் தற்போது உள்ளது. ஆனால் 3 அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி 146 இடங்கள் காலியாக இருக்கின்றன.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, திருச்செந்தூர், குருவாயூர், தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அனைத்து வகுப்புகளிலும் இடங்கள் இருக்கின்றன.

பொதிகை எக்ஸ்பிரசில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டன. 2–ம் வகுப்பு படுக்கை வசதியில் 27 பேர் காத்திருப்போரும், 3 அடுக்கு ஏ.சியில் 3 பேர் காத்திருப்போரும் உள்ளனர்.

ராமேஸ்வரம், திருச்சி, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இடங்கள் உள்ளன. தீபவாளி முன்பதிவு 20 மற்றும் 21–ந் தேதிகளில் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களில் நேற்று முன்பதிவு மையங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்து நின்றனர். நேற்று தொடங்கிய சிலநிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago