முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதிக்கு அடிக்கடி செல்ல எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக 20:

மக்கள் விரும்பும் வகையில் மிக சிறப்பான நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகவும் தீவிரமாகவும் உள்ளார். இதற்காக மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பாஜக தலைவர்கள், பாஜக மந்திரிகள், எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி புதிய அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வெளியிட்டு வருகிறார். தன்னை சந்திக்கும் பாஜக எம்பிக்களிடம் உங்கள் தொகுதிக்கு அடிக்கடி செல்லுங்கள். மக்களுடன் நெருங்கி பழகுங்கள் என்று சொல்ல மோடி தவறுவதில்லை. அது போல் பாஜக மந்திரிகளிடமும் பிரதமர் மோடி அடிக்கடி உங்கள் தொகுதி மக்களை சென்று பார்த்தீர்களா? என்று கேட்க தவறுவது இல்லை. மோடியின் இந்த கோரிக்கையால் பாஜக எம்பிக்களில் பெரும்பாலானவர்கள் அடிக்கடி தொகுதிக்கு சென்று மக்களிடம் குறை கேட்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பாஜக எம்பிக்கள் 275 பேரின் மக்கள் சேவை செயல்பாடுகளை பிரதமர் மோடி ரகசியமாக கண்காணிக்க தொடங்கி உள்ளார். பாஜக எம்பி மக்களுடன் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை மூன்று வித ஆய்வுகள் நடத்தி பிரதமர் மோடி பட்டியலிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியை பாஜக எம்பிக்கள் எப்படி பயன்படுத்தி செலவிடுகிறார்கள் என்பதும் கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் தொகுதி நிதியை சிறப்பாக செயல்பட ஒருங்கிணைப்பு குழு ஒன்றையும் மோடி அமைத்துள்ளார். இவை தவிர ஒவ்வொரு பாஜக எம்பியும் பாராளுமன்றத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு ரிப்போர்ட் கார்டு முறையையும் மோடி கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி பிரச்சினைகள் பற்றி பேசாத எம்பிக்களை அழைத்து அறிவுரைகளை வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்