முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கருத்தரங்கில் சு.சுவாமி: ஞானதேசிகன் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.20 - மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 84-வது பிறந்த நாள் விழா மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் தீரர் சத்தியமூர்த்தியின் 127-வது பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது

அலங்கரிக்கப்பட்ட ஜி.கே. மூப்பனாரின் உருவப் படத்துக்கு ஞானதேசிகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.பி.க்கள் பெ. விஸ்வநாதன், பீட்டர் அல்போன்ஸ், கே. ராணி, மாநிலப் பொதுச்செயலாளர் கே. சிரஞ்சீவி, தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் பி.வி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. எனவே, இது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தா அல்லது மத்திய அரசின் கருத்தா என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என்ற வெளிவரும் செய்திகள் தவறானது. கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்கள் எந்தத் தவறும் செய்யாதவர்கள் என்று கூறப்படுகிறது. எனவே, அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர் பிரச்னையும், ஈழத் தமிழர் பிரச்னையும் தீர இந்தியா - இலங்கை இடையே நல்லுறவு நீடிப்பது முக்கியம். ஆனால், இலங்கையில் நடைபெறும் ராணுவக் கருத்தரங்கள் எந்த அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்கிறார் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார் ஞானேதசிகன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago