முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 9 திருமணங்களை முதல்வர் நடத்தி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக. 20 – முதல்வர் ஜெயலலிதா சென்னையில்இன்று (புதன்கிழமை) 9 திருமணங்களை நடத்தி வைத்து வாழ்த்துகிறார். அமைச்சர் செந்தூர் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், கே. குப்பன் இல்லத் திருமணம் உட்பட 9 திருமணங்களை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமை ஏற்று நடத்தி வைக்கிறார்.

திருமண விழாவுக்கு வருகை தரும் முதல்வரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரை வழிநெடுக முதலமைச்சரை வரவேற்று ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.செந்தூர் பாண்டியன் மகன் சி.ஐயப்பராஜ்–எஸ். அருணாஸ்ரீ;

திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான ஆர். முருகையா பாண்டியன் மகன் ஆர்.எம். வெங்கட்ராமன்–ஆர்.சுபிதா;

அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு மகன் எம்.ஆர். பாலாஜி–ஏ.பிரியங்கா;

திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் மகள் டாக்டர் என். காயத்ரி–டாக்டர் எஸ். கிருஷ்ணபாரத்;

திருவொற்றியூர் நகர செயலாளரும், திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே. குப்பன் மகன் கே. மோகன்–ஆர். மோனிகா;

சிவகங்கை மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் கே.கே. உமாதேவன் மகன் கே.கே.யு. முத்துக்குமரன்–ஆர். சேதுக்கரசி;

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கழக செயலாளர் ஏ.எல். வெங்கடேஷ்வரன்–எல்.சுவாதினி;

விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் திண்டிவனம் கே.சேகர் மகன் கே.எஸ். ஜெயப்பிரகாஷ்–ஆர். ராஜேஸ்வரி;

மதுராந்தகம் நகர மாவட்ட பிரதிநிதியும், நகர்மன்ற 5–வது வார்டு உறுப்பினருமான இ. கிருஷ்ணன் மகள் கே. பகவதி–எம். ராஜ்மோகன்

–ஆகிய 9 திருமணங்களை முதல்வர் ஜெயலலிதா நாளை தலைமை ஏற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

இந்த திருமணங்களை நடத்த பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

உற்சாக வரவேற்பு

இந்த திருமணங்களை நடத்தி வைக்க வருகை தரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடி தோரணங்கள் கட்டப்பட்டு ஏராளமான பேனர்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago