முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுக்களின் பராமரிப்பு பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.20 - சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த ராதா ராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கோவில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை பராமரிக்க கோசாலை என்ற பசு மடம் உள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த பசுக்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. திருவண்ணாமலையில் உள்ள ஒரு கோவில் பசு கன்று ஒன்று அண்மையில் இறந்துள்ளது. எனவே, இந்த பசுக்களை முறையாக பராமரிக்க கண்காணிப்புக் குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில், ‘கோவில்களில் தானமாக வழங்கப்படும் பசுக்களை பராமரிக்கப்படுவதை ஆய்வு செய்ய கால்நடைத்துறை இணை இயக்குனர் அனந்தபத்மநாபன், விலங்குள் நல வாரியத்தை சேர்ந்த சுமதி, மனுதாரர் ராதாராஜன் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த 3 பேர் குழு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று அங்கு பசுக்களை பராமரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்