முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லாமை இல்லாமல் செய்திட்டவர் முதல்வர்: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.20 - கோவை புறநகர் மாவட்டம், அம்மா பேரவையின் சார்பில், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற கழக அரசின் மூன்றாண்டு கால சாதனைகளை விளக்கி 16.08.2014, சனிக்கிழமை அன்று நடைபெற்ற அம்மா பேரவை மக்கள் முகாம் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்¦கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது.

கல்லாமை, இல்லாமை செய்திடவும் தமிழகத்தில் பாமர ஏழைகளும் 100ரூ கல்வி அறிவு பெற மூன்றே ஆண்டுகளில் 44,851.78 கோடி ரூபாயும் 2014 – 2015ம் ஆண்டில் 19,000 கோடி ரூபாய் வழங்¦கி தமிழகம் கல்வி, கல்லாதவர்களே இல்லாத மாநிலமாகிட பள்ளி கல்விக்கு மட்டும் 62,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும், தமிழகத்தில் அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கிட உயர்கல்வி துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் 9285 கோடி ரூபாயும் 2014 – 2015ம் ஆண்டில் 3627 கோடி ரூபாயும் இது வரை, உயர்கல்விக்கு மட்டும் 12912 கோடி ஒதுக்கீடு செய்து வருபவர் முதல்வர் ஜெயலலிதா தான்.

ஆதிதிராவிடர், பழங்¦குடியினர் உட்பட அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களுக்கும் விலையில்லா நலத்திட்டங்¦கள் வழங்¦கியும், மூன்றே ஆண்டுகளில் மாநில அரசு நிதியாக ரூபாய் 2,560 கோடி வழங்¦கியும், 1638 கோடி செலவில் 16.16 லட்சம் மாணக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள், 1048 கோடியில் 63.83 லட்சம் மாணக்கர்களுக்கு இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத்தொகை, 846 கோடி செலவில் 468.48 லட்சம் மாணக்கர்களுக்கு 4 செட் சீருடைகள், விலையில்லா மடிக்கணினி முதல் காலனி வரை வழங்¦கியும், முட்டையுடன் 13 வகையான கலவை சத்துணவு, நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25ரூ சேர்க்கை கட்டிட தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளரின் குழந்தைகளுக்கும் கல்வி வசதி குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்க விதிகளை முதன்முதலில் அரசு இதழில் வெளியிட்டது முதல்வர் ஜெயலலிதாவின் அரசு தான்.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் மேம்பாடு பெற முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாண்டு கால ஆட்சியில் வறுமையை முற்றிலும் ஒழிக்க விலையில்லாஅரிசி, முதியோர் மற்றும் விதவைகளுக்கு வழங்¦கப்படும் உதவித்தொகை உயர்வு, தாய்மார்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, ஏழைப்பெண்களுக்கு கறவைமாடுகள் மற்றும் ஆடுகள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப 1016 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சரின் புதிய விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம். சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவித்தொகை 25,000 முதல் 50,000 வரை மற்றும் தாலிக்கு 4கிராம் தங்¦கம் வழங்¦கியும், மலிவு விலை அம்மா உணவகம், மக்களை நாடி அம்மா திட்டம், பசுமை நுகர்வோர் அங்¦காடிகள் அமைக்க ஆணை வழங்¦கி தமிழக மக்களின் துயர்துடைத்தவர் முதல்வர் ஜெயலலிதா தான்.

இந்தியாவிலேயே தமிழகம் கல்வித்துறையில் மற்ற மாநிலங்¦களுக்கு முன்னோடியாக சிறந்து விளங்¦கிட புதுயுகம் படைக்க வந்த எங்¦கள் புதுமைத்தாயின் பொற்கால ஆட்சியை குறைகூறி, கல்வி உரிமை மாநாடு நடத்த அறிவித்தவர்கள், மத்தியிலும், மாநிலத்திலும்

கூட்டணி பூண்டு தமிழர்தம் வளங்¦களை கொள்ளையடித்து ஈழத் தமிழ் இனம் அழிய கைகோர்த்து நின்று துணை புரிந்தவர்கள் இன்று, எழுச்சி தமிழர் என்னும் போர்வையில் எழுச்சி காண பொய் முழக்கமிட்டு, தமிழர்களையும், தமிழக மக்களையும், மாக்களாக்க என்னுகின்ற ஏமாற்றுக்காரர்களை நம்பி, தமிழக மக்கள் ஏமாறவும் மாட்டார்கள், ஒருபோதும்

ஏற்கவும் மட்டார்கள். இன்று தமிழ் இன துரோகிகள் கல்வி உரிமை மாநாடு நடத்தி பொய் முழக்கமிடுகின்றனர் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் யாருமே செய்திராத வகையில் பள்ளி கல்விக்கு விலையில்லாமல் அனைத்தையும் வழங்¦கி கல்லாமை இல்லாமல் செய்திட்டவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி பேசினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆர்.கனகராஜ், என்.எஸ்.கருப்புசாமி, என்.கே. செல்வதுரை, மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள், கந்தசாமி, ரகுபதி, மருதாசலம், வ.மா.பழனிசாமி, விஜியகுமார், ராதாமணி, கண்ணம்மாள், பி.ஆர்.கே. குருசாமி, சக்திவேல், சிங்¦கை அம்புஜம் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்