முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: ராணுவ வீரர் கைது

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி,ஆக.20 - அஸ்ஸாம் - டெல்லி ராஜ்தானி ரயிலில் இளம் பெண்ணிடம் ராணுவ வீரர் ஒருவர் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் தெரிவித்ததின் பேரில் அந்த நபர் கவுகாத்தி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ரயில்வே செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; லும்டிங் - சபர்முக் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பயணித்தபோது அதிகாலை 4 மனியளவில் சம்பவம் நடந்துள்ளது. ஏ.சி. வசதி கொண்ட ரயில் பெட்டியில் அந்த ராணுவ வீரர் பயணித்துள்ளார். அதே பெட்டியில் 17 வயது இளம் பெண் ஒருவர் அவரது உறவினருடன் பயணித்துள்ளார். இளம் பெண்ணிடம், ராணுவ வீரர் அத்துமீறவே அவர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். இதனையடுத்து, அந்த நபர் கவுகாத்தி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றார்.

மேலும், கைது செய்யப்பட்ட அந்த ராணுவ வீரர் பெயர் குல்வீந்தர் சிங். அவர், ராணுவ பொறியியல் பிரிவில் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago