முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசராம் பாபு ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable


புது டெல்லி, ஆக 21 - ஜோத்பூர் ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட சாமியார் அசராம் பாபுவின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய மருத்துவர்கள் குழு ஒன்றை அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வட மாநிலங்களில் பிரபலமாக இருக்கும் சாமியார் அசராம் பாபு மீது 16 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பலாத்கார புகார் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அவரது ஆசிரமத்தில் சிகிச்சை அளிப்பதாக வரவழைத்து தன்னிடம் பலமுறை உறவு கொண்டதாக போலீசில் தெரிவித்தார். கோர்ட் உத்தரவின் பேரில் அசாரம்பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை ஜோத்பூர் செஷன்ஸ் கோர்ட்டும் ஜெய்ப்பூர் ஐகோர்ட்டும் நிராகரித்தது.
இந்நிலையில் தனக்கு தீராத தலைவலி இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை பெற ஜாமீன் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து தள்ளுபடி செய்தது. அனைத்து சாட்சிகளிடமும் கோர்ட் விசாரணை முடிந்த பின்னர் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என அசாரம் வக்கீலிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும் அசாரம் பாபுவின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய டாக்டர்கள் குழு ஒன்றை அமைக்குமாறு ஜோத்பூரில் உள்ள எஸ்.என். மருத்துவ கல்லூரி முதல்வருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். டாக்டர் குழு அறிக்கையை செப்டம்பர் 23ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்