முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் நினைவிடத்தில் சோனியா - ராகுல் மரியாதை

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக 21 - ராஜீவ் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 71வது பிறந்த நாள் நேற்று காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரசார் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். டெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்