முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் ஊழியர் செக்ஸ் புகார்: மும்பை நீதிபதி சஸ்பெண்டு

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஆக 21 - மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதியாக பணிபுரிபவர் எம்.டி. கெய்க்வாட். இவர் மீது அதே கோர்ட்டில் ஊழியராக பணிபுரியும் பெண் ஒருவர் 3 வாரங்களுக்கு முன் புகார் கொடுத்தார். அதில் கோர்ட் அறையில் தன்னிடம் நீதிபதி கெய்க்வாட் தவறாக நடக்க முயன்றார் என்று கூறியிருந்தார். இந்த புகார் பற்றி சிறப்பு நீதிபதி எஸ்.டி. துலாங்கர் விசாரணை நடத்தினார். அதில் கெய்க்வாட் மீதான செக்ஸ் புகாருக்கு ஆதாரம் இருப்பது தெரியவந்தது. விசாரணை அறிக்கை மும்பை ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் ஷாலினி ஜோஷியிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி எம்.டி. கெய்க்வாட் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் அவர் மீது இலாகா பூர்வ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. செசன்ஸ் கோர்ட் மூத்த நீதிபதி அல்லது ஐகோர்ட் நீதிபதி இந்த விசாரணையை நடத்துவார். விசாரணை நீதிபதியின் பெயரை ஐகோர்ட் தலைமை நீதிபதி அறிவிப்பார் என்று பதிவாளர் ஜெனரல் ஷாலினி ஜோஷி தெரிவித்தார். இலாகாபூர்வ விசாரணையின் போது நீதிபதி கெய்க்வாட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும். இந்த விசாரணைக்கான கால வரம்பு ஏதும் விதிக்கப்பவில்லை. விசாரணையின் போது நீதிபதி கெய்க்வாட்டோ அல்லது அவரது வக்கீலோ ஆஜராகி தங்கள் தரப்பை எடுத்து கூறலாம் என்றும் பதிவாளர் ஷாலினி ஜோஷி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்