முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் பிரச்சினையில் விளையாட்டு: கருணாநிதி

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.21 - தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையிலே சிறைப்பட்டிருந்த மீனவர்களை எல்லாம் விடுவிக்க அதிபர் ராஜபக்சே உத்தரவு பிறப்பித்த போதிலும், இலங்கை கடற்தொழில் மந்திரி, தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறாரே?.

இலங்கை அரசு இப்படியெல்லாம் மாற்றி மாற்றிப் பேசி இந்திய அரசுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது. ஏதோ தமிழக மீனவர்கள்பால் அக்கறை உள்ளவரைப் போலவும், இந்திய சுதந்திரத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பவரைப் போலவும் காட்டிக்கொள்ள, இலங்கை அதிபர் மீனவர்களை விடுவிப்பதாக அறிவிக்கிறார். ஆனால், அந்த நாட்டின் கடற்தொழில் மந்திரி திட்டவட்டமாக, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்று அறிவித்திருக்கிறார்.

இலங்கையிடம் இவ்வாறு 62 படகுகள் சிக்கியிருக்கின்றன. அந்த படகுகள் இல்லாமல் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான தங்கள் தொழிலினை நடத்த முடியாது. செய்தியாளர்கள், இலங்கை மந்திரியிடம், "இந்திய மீனவர்களின் விசைப் படகுகள் விடுவிக்கப்படுமா?" என்று கேட்டதற்கு "இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 62 படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை" என்று இரக்கமின்றி தெரிவித்திருக்கிறார்.

அந்த விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் 24-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மத்திய அரசின் சார்பில், மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இந்த பிரச்சினை பற்றி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்