முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்குகள் - சேவை வரி குறித்த மசோதா: அமைச்சர் பேச்சு

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.21 - சரக்குகள் மற்றும் சேவை வரி குறித்த சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்று டெல்லி மாநாட்டில் அமைச்சர் சம்பத் பேசியுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த மாநில நிதி மற்றும் வணிகவரித்துறை அமைச்சர்களின் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில நிதியமைச்சர் எ.ஆர்.ரதெர் தலைமையில் புது டில்லி தலைமைச்செயலகத்தில் நேற்று (20-08-2014) நடைபெற்றது .இக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு முத்திரைத் தாள் சட்டம் அமைச்சர் .எம்.சி.சம்பத் கலந்து கொண்டார் , வணிக வரித்துறை முதன்மை செயலாளர் .பிரபாகர்,.,நிதி துறை முதன்மை செயலாளர் .சண்முகம் ,மற்றும் அரசு முதன்மை செயலாளர் மற்றும் வணிகவரித்துறை ஆணையாளர் .ராஜாராமன்,., .ஆகியோர் கலந்து கொண்டனர்.

சரக்கு மற்றும் சேவை வரிகள் குறித்து டெல்லியில் நடந்த மாநாட்டில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு மாநில அரசின் கருத்துக்களை எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியதாவது:_

மத்திய, மாநில அரசுகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவதாக தமிழக முதல்வரின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாநாட்டில் 2014 ஜூன் மாதம் தாக்கல் செய்த விதிவிலக்கு குறித்த பரிந்துரைகள் ஐ.ஜி.எஸ்.டி., ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் இறக்கு மதி குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் மாநில அரசுகளின் கருத்துகளை நாங்கள் எடுத்துரைக்கிறோம்.

1. வரி விதிப்பில் இரட்டை கட்டுப்பாட்டு முறையை நீக்கவேண்டும்.

சரக்குகள் மற்றும் சேவை வரி குறித்த சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இந்த திருத்த மசோதா – ‘‘பெட்ரோலிய பொருட்கள் மீது இரட்டை வரி விதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கும்’’ என்றும், ‘‘தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு ஏற்புடையதல்ல’’ என்றும், ‘‘திருத்த மசோதாவில் உள்ள ஒரு சில அம்சங்கள் தமிழகம் போன்ற தொழில் உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்களின் வருவாயைப் பாதிக்கும்’’ என்றும் முதலமைச்சர்ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

‘‘நான் தெரிவித்துள்ள யோசனையை செயல்படுத்த காலம் கடந்துவிடவில்லை’’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரட்டை வரி கட்டுப்பாட்டு முறையில் மத்திய அரசு 1.5 கோடிக்கு மட்டும் கட்டுபாடுகளை விதிக்கிறது. ஆனால் அதற்கு பதிலாக 1.5 கோடிக்கு மேலாகவும் ஏற்ககூடியதாக அமையவேண்டும். வாட் வரி விதிப்புக்கு வெளியில் உள்ள வணிகர்களின் விற்பனையில் 25 லட்சம் ரூபாய் வரைமுறைக்கு பதிலாக 10 வரைமுறை விதிக்கவேண்டும்.

இதேபோல காம்போன்ட் வரி விகிதத்தில் 50 லட்சம் ரூபாய் என்பது ஞிடிக்கவேண்டும். இதில் தமிழக அரசுக்கு ஏற்படும் இழப்பீடுகள் சரி செய்யப்படவேண்டும். மேலும், மாநில வாட் வரி விதிப்பில் இருக்கும் விதிவிலக்குகள் விளக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் மாற்றி அமைத்துக்கொள்கிறோம். இதற்கு மாநில அரசுகள், உள்ளூர் முக்கியதுவத்தையொட்டி சரக்குகளை தேர்ந்தெடுப்பதில் அனுமதி அளிக்கப்படவேண்டும். அதோடு இதற்கான நஷ்ட ஈடுகளை குறைக்கக்கூடாது.

2. இறக்கு மதியில் வரி விகிதம் தற்போதைய வரி விகிதத்தில் இறக்கு மதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிகளில் உற்பத்தி செய்யும் மாநிலங்களும், பொருட்களை நுகரும் மாநிலங்களையும் சமமாக நடத்தக்கூடாது. தமிழகம் பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக உள்ளது. இந்த விஷயத்தில் நிதி மற்றும் பண பரிமாற்ற விஷயங்களில் விதிக்கப்படும் வரிகளில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்.

ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது வரி விதிக்கும் நிர்வாகிகள் அதை இறக்கு மதி செய்யும் மாநிலங்களோடு உள்ள சர்சைகளை மாற்றி அமைக்கவேண்டும்.

விநியோக மாதாந்திர வணிக அறிக்கைகளை தாக்கல் செய்யவேண்டும். அதன் மீதான மேலாதிக்க நிலைமைகள் ஞிக்கப்படவேண்டும்.

அடுத்து 1.5 கோடிக்கு மேல் மிகாமல் வணிகம் செய்யும் வணிகர்கள், விநியோகதஸ்கர்களுக்கும் அதற்கு குறைந்து வணிகம் செய்யும் வணிகர்களின் மாதாந்திர அறிக்கை விஷயத்திலும், வேறுபாடுகளை அகற்றவேண்டும்.

இறுதியாக, அரசியல் சட்ட திருத்த மசோதா நகலில், புகையிலை மற்றும் புகையிலை சம்மந்தப்பட்ட உற்பத்தி பொருட்கள் விஷயத்தில் மாநிலங்கள் விதிக்கும் வரிகள் குறித்து சேர்க்கப்படவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு மட்டும் ஆன விதிகள்தான் சேர்க்கப்பட்டுள்ளன.

இறுதியாக இந்த திருத்த மசோதாவில் பெட்ரோல் மற்றும் டீசல், பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட்டு வரி விதிப்பு விஷயத்தில் மாநிலங்களின் அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டு உள்ளன. மாநிலங்களுக்கான வரிவிதிப்பு முறைகள் இதில் சேர்கப்படவில்லை. மாநிலங்கள், பெட்ரோலிய விற்பனை விஷயத்தில் கூடுதல் வரி விதிப்பு முறையை செய்ய விதிமுறைகள் வகுக்கப்படவேண்டும்.

அதோடு இந்த விஷயத்தில் ரெட்டை வரிவிதிப்பு முறைய தமிழகம் ஏற்கக்கூடியதாக இல்லை. தமிழகத்திற்கு பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி தொகையில் குறிப்பிட்ட அளவு தமிழகத்திற்கு அளிக்கப்படவேண்டும். ஒட்டுமொத்தமாக இந்த திருத்த மசோதா மாநிலங்களுக்கான நஷ்ட ஈடு அளிக்கும் விஷயத்தில் உரிய விதிமுறைகளை வகுக்கவேண்டும். மேலும் மாநிலங்களின் கருத்துக்கள் ஏற்கப்பட்டு உரிய திருத்த முறைகளை ஏற்கப்படவேண்டும் என்று ஏற்கனவே எங்கள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதை தாங்கள் ஏற்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago