முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் அமெரிக்க நிருபர் தலை துண்டித்து படுகொலை

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.21 - ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் தீவிரமாக முன்னேறி வருகின்றனர். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கும் அமெரிக்க பத்திரிகை நிருபரை தலைதுண்டித்து படுகொலை செய்தனர்.

இந்த நிருபரின் பெயர் ஜேம்ஸ் போலே. இவர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி முதல் இவரை காணவில்லை இவருடன் ஸ்டீவன் ஜோயல் கோட்லாப் என்ற நிருபரும் மாயமானார். இந்த நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யூடியூப் மற்றும் அல் புர்கான் மீடியா ஆகிய இணைய தளங்களால் ஒரு வீடியோவை ஒளிபரப்பினர். அந்த வீடியோவில் நிருபர் ஜேம்ஸ் போலேயின் தலை துண்டித்து கொலை செய்யப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது.

அந்த வீடியோவுக்கு அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என பெயரிட்டுள்ளனர். அதில் ஆரஞ்ச் நிற உடையில் நிருபர் ஜேம்ஸ் போலோ கைதியாக இருக்கிறார். அவர் அருகே முகத்தை மூடிய நிலையில் தீவிரவாதி நிற்கிறான். அதன் பின்னர் ஜேம்ஸ் போலோ தனது குடும்பம், உறவினர்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு உருக்க மான கோரிக்கை விடுத்து பேசுகிறார். பிறகு அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு பிணமாக சாய்கிறார். அதை தொடர்ந்து தீவிரவாதி அரைகுறை ஆங்கிலத்தில் பேசுகிறான். அதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசும் போது ஈராக்கில் உங்களது ராணுவம் குண்டுவீசி தாக்குகிறது. முஸ்லீம்கள் சாவுக்கு காரணமாக உள்ளது.

அங்கு நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும். முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும், காப்பையும் மறுத்தால் உங்களது மக்கள் இது போன்று ரத்தம் சிந்துவார்கள் உங்களது அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர்ந்து மற்றொரு பத்திரிகை நிருபர் ஸ்டீவன் ஜோயில் கோட்லோப் உயிர்பிழைப்பார். அது உங்கள் கையில்தான் உள்ளது என்று தெரிவிக்கிறான்.

இந்த வீடியோவை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago